செவ்வாய், 9 நவம்பர், 2010

காங்கிரஸ் தலைமையில் தனி அணி உருவாக தொண்டர்கள் விருப்பம்: இளங்கோவன்

நாகர்கோவில், நவ. 8:   தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் தனி அணி உருவாக வேண்டும் என்பதே ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.  நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸின் தனித்தன்மையைக் குறிப்பிட்டார். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்பதே காங்கிரஸôரின் விருப்பம்.   இதையே விஜயகாந்தின் தேமுதிகவும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் கூறி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் தனி அணி அமைந்தால் அதில் சேருவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியும் கூறிவருகிறது. தனி அணி குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடம்தான் முடிவு செய்யும்.  வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேருமா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் மேலிட தலைவர்களிடம் தமிழக காங்கிரஸôரின் உணர்வுகளை எடுத்துரைத்துள்ளோம். அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. குழந்தைகளைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில் போலீஸôரை குறைகூற விரும்பவில்லை. அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன.  சென்னையில் ராஜீவ்காந்தி சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் திருமாவளவனுக்கு தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என்பது குறித்து எனக்குத் தெரியாது.  கன்னியாகுமரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸôரும் பொதுமக்களும் கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறியுள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம். கன்னியாகுமரியில் அண்ணாவுக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பீடமும் அமைக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்திக்கும் கன்னியாகுமரியில் சிலை திறக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது திமுக- காங்கிரஸ் கூட்டணியின் முக்கிய நிகழ்ச்சியாக அமையும் என்றார் இளங்கோவன்.காங்கிரஸ் சார்பில் சிமென்ட் விற்பனைதமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முதல்வர் கருணாநிதியை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரும் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விலையை குறைக்காவிட்டால், முன்னர் சத்தியமூர்த்திபவனில் மூப்பனார் தலைமையில் சிமென்ட் விற்கப்பட்ட நடவடிக்கையை நாங்களும் தொடங்குவோம்.போக்குவரத்துத் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று ராமசுப்பு எம்.பி.யும், வசந்தகுமார் எம்.எல்.ஏ.வும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்தக் கோரிக்கை ஏற்கப்படாதது வருந்தத்தக்கது என்றார் இளங்கோவன்.
கருத்துகள்

உண்மைதான். காங். தனி அணியாக அல்ல, தனியாக நின்று மறைந்து ஒழிய வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் பேரவா. அந்நன்னாள் என்று வருமோ? கண்டிப்பாகக் கோவன் அந்த நாளை விரைவில் கொ்ண்டு வந்து விடுவார். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 4:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக