எல்லைப் பிரச்னை: ரஷியாவுக்கான ஜப்பான் தூதர் திரும்பஅழைப்பு
டோக்கியோ, நவ. 2: பசிபிக் கடலில் உள்ள 4 தீவுகள் யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சையால் ரஷியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ரஷியாவுக்கான ஜப்பான் தூதர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். இரண்டாம் உலகப் போரின்போது குறிப்பிட்ட 4 தீவுகளை ரஷியா கைப்பற்றியது. அந்தத் தீவுகள் தங்களுக்கே சொந்தம் என்று ஜப்பான் உரிமை கோரி வருகிறது. இந் நிலையில் அந்த தீவுப் பகுதிக்கு ரஷிய அதிபர் மெத்ததேவ் திமித்ரி அண்மையில் பயணம் சென்றார். இதற்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில், ரஷியாவுக்கான ஜப்பான் தூதர் மசாஹாரு திரும்ப அழைக்கப்படுவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
11/7/2010 4:36:00 AM
11/3/2010 10:48:00 AM