புதுதில்லி, நவ.12: இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டில் தவிர்க்கக்கூடிய நோய்கள் தாக்கிய நிலையில் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் 14 லட்சம் சிசுக்கள் மரணமடைந்தன.சமீபத்தில் நடத்திய ஒர் ஆய்விலிருந்து இது தெரியவந்துள்ளது. மத்திய அரசின் தலைமை பதிவாளர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். 2005=ம் ஆண்டில் ஓராண்டு முதல் 59 மாதங்கள் வரையிலான வயதுடைய சுமார் 14 லட்சம் சிசுக்கள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறந்தன என அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது. டான்செட் என்ற மருத்துவ இதழின் சமீபத்திய பதிப்பில் இந்த விஷயம் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. நிமோனியா, வயிற்றுப்போக்கு, பத்தாம் மாதத்திற்கு முன்பே குழந்தை பிறந்துவிடுதல், பிறக்கும்போது எடைக்குறைவுடன் பிறத்தல், பிறக்கும்போது நோய்த்தொற்று ஏற்படுதல்,பிரசவமாகும்போது மூச்சுத்திணறல் ஏற்படுதல் ஆகியவற்றால் இந்த குழந்தைகள் இறந்தன.இந்த ஆண்டில் பிறந்த ஒரு மாதத்திற்குள் 10 லட்சம் சிசுக்களும், 5-வது வயதை எட்டுவதற்குள் மேலும் 13 லட்சம் குழந்தைகளும் நரணமடைந்தன. சிசு மரணவிகிதங்களைக் குறைக்க வேண்டுமானால் பிரசவகாலத்திற்கு பின் நோய்தாக்காதவாறு குழந்தைகளைப் பாதுகாப்பது பயனுள்ளதாகக் கூறப்படுகிறது. 5 வயதுக்கு முன்பாக மரணமடையும் குழந்தைகள் பெரும்பாலும் நிமோனியா, வயிற்றுப்போக்கு ஆகியனவற்றால்தான் மரணமடைந்தன எனவும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
கருத்துகள்


By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 3:29:00 AM
11/13/2010 3:29:00 AM


By karuppan
11/12/2010 6:01:00 PM
11/12/2010 6:01:00 PM


By karuppan
11/12/2010 6:00:00 PM
11/12/2010 6:00:00 PM


By Vadivel
11/12/2010 5:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/12/2010 5:53:00 PM