கொழும்பு, நவ.6: இலங்கையில் பேசப்படும் தமிழ் உள்பட பிற மொழிகளை கற்றுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இலங்கையில் பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு சிங்கள மொழியைத் தவிர வேறெந்த மொழியும் தெரியவில்லை. இதுபோன்றவர்கள் மக்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் சிரமப்படுகின்றனர். எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் பிற மொழிகளையும் கற்றுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.அரசின் இந்த நடவடிக்கை மூலம் அரசு ஊழியர்கள் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் கிழக்குப் பகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்வார்கள். இனிமேல் தமிழ் மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்ற இடைவெளி இருக்காது என்றும் அந்நாட்டு அரசு நம்புகிறது.இலங்கையில் இப்போது நிலவும் பல பிரச்னைகளுக்கு அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள தகவல் பரிமாற்ற இடைவெளியே முக்கிய காரணமாக உள்ளது. அரசு ஊழியர்கள் பிற மொழிகளையும் கற்றுக்கொண்டால் பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜெயரத்னே தெரிவித்தார்.
கருத்துகள்

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
11/7/2010 4:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்11/7/2010 4:30:00 AM