திருத்தணி, நவ. 8: திருத்தணியில் கனமழை காரணமாக, தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. ÷தமிழகம் முழுவதும் 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்படைந்து, திருத்தணிக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. ÷தொடர் கனமழையின் காரணமாக, திருத்தணி காமராஜர் மார்க்கெட், அரக்கோணம் சாலையில் உள்ள உழவர் சந்தை போன்ற இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை தக்காளி கிலோ ரூ. 6-க்கு விற்பனை செய்யப்பட்டது. ÷இந்நிலையில் திருத்தணிக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் ஞாயிற்றுகிழமை விலை உயர்ந்து கிலோ ரூ. 15 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ÷இது குறித்து காய்கறி வியாபாரி பழனி கூறியது: "திருத்தணியில் உள்ள காமராஜர் மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு சென்னை, பெங்களூர், வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ÷தினமும் 4 முதல் 6 லோடுகள் தக்காளி வரத்து உள்ளது. கடந்த மாதம் 20 கிலோ கொண்ட பெட்டி ரூ. 160-க்கும், முதல் ரகம் ரூ. 190-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ÷சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ. 10 முதல் அதிகபட்சமாக ரூ. 12-க்கு விற்பனை செய்யப்பட்டது. ÷தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 8 வரை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ. 10-க்கு விற்ற இரண்டாம் ரக தக்காளி தற்போது ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. ÷தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என்று அவர் கூறினார்.
கருத்துகள்

அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 4:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/9/2010 4:05:00 AM