1. இதனை ஏன் இணையப் பக்கத்தில் வெளியிடவில்லை. 2. இப்பொருண்மையில் 3.11.2010 அன்று கூட்டம் நடத்துவதற்கு முன்பு தமிழ்க்காப்பு அமைப்புகள் திரு வீரமணி அவர்களைச் சந்தித்து முறையிட்டு இக் கருத்துருவை நிறுத்துமாறு பலரும் கோரி வருவதற்கு மாறாக தமிழக அரசு அறிஞர்கள் கருத்தை அறிந்து தெரிவிப்பதற்கு வாய்ப்பாக ஒத்தி வைக்கச் சொல்ல வேண்டும் என வேண்டியதற்கேற்ப அவரும் அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் தெரிவிக்க 2.11.10 அன்றே ஒருங்குறி அவையத்தின் கூட்டப் பொருண்மைகளில் இருந்து இப் பொருண்மை 26.2.2011 கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒருங்குறி அவையத்தின் உறுப்புக் கட்டணத்தைச் செலுத்தாமல் கருத்து தெரிவிக்கும் உரிமையைப் பறிகொடுக்கச் செய்த தமிழக அரசு கூட்ட நாளான 6.11.10 அன்றுதான் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது வருத்தத்திற்குரிய செயல். அணுகுதற்கு எளிமையும்
புரிந்து கொண்டால் விரைந்து செயலாற்றும் திறனும் கொண்ட கலைஞர் இருக்கும்பொழுதே உரியவர்கள் உறங்குகிறார்கள் எனில், என் சொல்வது? முதல்வர் தன் அருகே இருப்போரை நம்பாமல் உண்மையான ஈடுபாட்டாளர்களுடன் கலந்து பேசி நிலையாக இத்தீங்கு களையப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

+++++++++++++++++++++++
| |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக