கொழும்பு, நவ.7: இலங்கையில் உள்ள வெளிக்கடை சிறைக்குள் கைதிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்தது. இதில் 42 பேர் காயமடைந்தனர்.இலங்கையில் உள்ள பெரும்பாலான சிறைகளுக்குள் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக போதைத் தடுப்பு போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறைகளுக்குள் மூன்று வாரங்களுக்கு முன்பு திடீர் சோதனை தொடங்கி நடந்து வருகிறது.ஞாயிற்றுக்கிழமை வெளிக்கடை சிறைக்குள் சோதிக்க வந்த போதைத் தடுப்பு போலீஸôர், சிறைகளுக்குள் இதுவரை நடத்திய சோதனையில் கணிசமான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 11,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.இதைக்கேட்ட கைதிகள் ஆத்திரம் அடைந்தனர். தங்களையும் போலீஸôர் கைது செய்து விசாரிக்க அழைத்துச் சென்றிடுவார்களோ என்று அச்சம் அடைந்து போலீஸôர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீஸôரும் தாக்குதல் நடத்தினர். இதனால் சற்று நேரம் சிறை கலவரக் களமாக காட்சி அளித்தது. இதில் 42 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் போலீஸôர் எத்தனை பேர், கைதிகள் எத்தனை பேர் என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்

அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 4:34:00 AM
11/9/2010 4:34:00 AM