செவ்வாய், 9 நவம்பர், 2010

தினமணி தலையங்கங்கள்; அப்துல் கலாம் வெளியிடுகிறார்

சென்னை, நவ. 8: தினமணியில் ஆசிரியர் கே.வைத்தியநாதன் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு ""உண்மை தெரிந்தது சொல்வேன்'' என்ற தலைப்பில், 3 தொகுதிகள் கொண்ட நூலாகத் தயாராகியிருக்கிறது.இந் நூல் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவக் கல்லூரியில் வரும் வியாழக்கிழமை (11.11.2010) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் தலைவர், மேலாண் இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியா நூலைப் பெற்றுக்கொண்டு தலைமையுரை ஆற்றுகிறார்.தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஏற்புரை வழங்குகிறார்.விழா அரங்கில் நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். வாசகர்கள் பிற்பகல் 2.30 மணிக்குள் இருக்கைகளுக்கு வந்து அமருமாறு கோரப்படுகிறார்கள்.
கருத்துகள்

நல்ல முயற்சி! பாராட்டுகள்! விலையையும் (தள்ளுபடியுடன்) குறிப்பிட்டிருக்கலாம். நூலில் சில வாசகர்களின் பின்னூட்ங்களையாவது சேர்த்திருப்பின் நன்று. அன்று நான் வெளியூரில் உள்ளதால் பங்கேற்க இயலாமல் இப்பொழுதே வாழ்த்துகிறேன். விழா மிகவும் சிறப்பாக அமையட்டும்! தமிழ் ஆர்வலர் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களின் மேலும் பல நூலகள் வெளிவரட்டும்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக