சென்னை, நவ. 11: அமைச்சர் ஆ. ராசாவை பதவியிலிருந்து நீக்குவதால் மத்திய அரசு கவிழாது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு ஜெயலலிதா அளித்துள்ள பேட்டி வருமாறு: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழல் குறித்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக நான் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறேன். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல் இதுவாகத்தான் இருக்கும். இது எவ்வளவு பெரிய ஊழல் என்று எல்லோருக்கும் புரிய வைக்க இவ்வளவு நாள்கள் ஆகியிருக்கிறது. இந்த ஊழல் குறித்து இன்று சிறு குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கிறது. எனினும்,அமைச்சர் ஆ. ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராசாவை அமைச்சரவையிலிருந்து நீக்கி, அவரை விசாரணைக்கு உட்படுத்த பிரதமர் மன்மோகன் சிங்கால் இயலாமல் போனது ஏன் என்ற கேள்வியை சாதாரண அடித்தட்டு மக்கள் கூட இப்போது கேட்கிறார்கள். அரசு கவிழாது: ராசா மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கு கூட்டணி அரசுதான் காரணம். ராசாவை பதவியிலிருந்து நீக்கினால், அதனால் அரசுக்கு அளிக்கும் ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்று, இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என்று காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது. உண்மையில், காங்கிரஸ் அவ்வாறு அஞ்சத் தேவையில்லை. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். பெரும் ஊழலுக்கு காரணமான அமைச்சர் ஆ. ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அரசியல் உறுதிப்பாட்டோடு காங்கிரஸ் கட்சி செயல்படுமானால், மத்திய அரசை பாதுகாக்கும் வழியை நான் காட்டுகிறேன். தி.மு.க.விடம் 18 எம்.பி.க்கள் உள்ளனர். மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டாலும் ஆட்சி கவிழாது. அ.தி.மு.க.விடம் 9 எம்.பி.க்கள் உள்ளனர். இது பற்றி வேறு சில நட்புக் கட்சித் தலைவர்களிடமும் பேசியிருக்கிறேன். அவர்களும் ஆதரவு தர தயாராக உள்ளனர். எனவே, நிச்சயமாக 18-க்கும் சற்று அதிகமான எம்.பி.க்களின் ஆதரவை மத்திய அரசுக்கு திரட்டித் தர என்னால் முடியும் என்று உறுதியாகக் கூறுகிறேன். நிபந்தனையற்ற ஆதரவு: மத்திய அரசை ஆதரிக்க அ.தி.மு.க. எந்த நிபந்தனையையும் விதிக்காது. இவ்வளவு பெரிய ஊழலை செய்த ஒருவர், கூட்டணி அரசு என்ற நெருக்கடியைப் பயன்படுத்தி தப்பித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் மத்திய அரசை ஆதரிக்க முன்வந்துள்ளேன். ஊழல் புகாருக்கு ஆளான சசி தரூர், சுரேஷ் கல்மாடி, அசோக் சவாண் போன்றவர்களின் பொறுப்புகளை காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது. ஆட்சியில் ஊழலை அனுமதிக்க முடியாது என்ற காங்கிரஸ் கட்சியின் எண்ணத்தையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. எனினும், ஊழலை அனுமதிக்காத கட்சி காங்கிரஸ் என்பதை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டுமானால், அமைச்சர் ஆ. ராசாவையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஆ. ராசாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று நான் கருதவில்லை. அவரைப் பதவியிலிருந்து நீக்குவதால் ஆட்சி கவிழலாம் என்பதால்தான் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக நான் கருதுகிறேன். இதைத்தவிர வேறு காரணம் ஏதேனும் இருந்தால், அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனினும், இனியும் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்கினால் அது அக்கட்சியின் நம்பகத்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும் பாதிக்கப்படும். வீதியில் இறங்கி போராட்டம்: அமைச்சர் ஆ. ராசா மீது பிரதமர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகிறேன். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவார்கள். அந்தப் போராட்டங்களை நானே தலைமை தாங்கி நடத்துவேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். நடந்ததை மறக்க வேண்டும்சோனியா காந்திக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையேயான உறவில் கடந்த காலத்தில் ஏற்பட்ட சில பின்னடைவுகள் அ.தி.மு.க. - காங்கிரஸ் உறவுக்குத் தடையாக இருக்குமா என்ற கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில்: அ.தி.மு.க. தொடங்கி 38 ஆண்டுகள் ஆகிறது. நான் அரசியலுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகிறது. இவ்வளவு கால அரசியல் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படுவது இயல்பானதுதான். எனினும், அரசியலில் கடந்த காலத்தில் நடந்ததை மட்டுமே நினைத்து செயல்படுவது யாருக்கும் நல்லதல்ல. இதனால் நம் முன்னேற்றம் பாதிக்கும். எனவே, கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்து விட்டு, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் நன்மை பயப்பதாக இருக்கும் என்றார்.
கருத்துகள்

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/12/2010 7:38:00 AM
11/12/2010 7:38:00 AM


By vallam thamil
11/12/2010 7:10:00 AM
11/12/2010 7:10:00 AM


By RAJASJI FUCKER
11/12/2010 6:40:00 AM
11/12/2010 6:40:00 AM


By Komalam
11/12/2010 5:51:00 AM
11/12/2010 5:51:00 AM


By Palanisamy T
11/12/2010 5:32:00 AM
11/12/2010 5:32:00 AM


By Palanisamy T
11/12/2010 5:29:00 AM
11/12/2010 5:29:00 AM


By Ravidasa
11/12/2010 4:59:00 AM
11/12/2010 4:59:00 AM


By rajesh
11/12/2010 4:39:00 AM
11/12/2010 4:39:00 AM


By PA Valarmathi
11/12/2010 2:53:00 AM
11/12/2010 2:53:00 AM


By PA Valarmathi
11/12/2010 2:52:00 AM
11/12/2010 2:52:00 AM


By Nanjil Sampath
11/12/2010 2:49:00 AM
11/12/2010 2:49:00 AM


By Thanga Balu
11/12/2010 2:45:00 AM
11/12/2010 2:45:00 AM


By rajasji
11/12/2010 2:42:00 AM
11/12/2010 2:42:00 AM


By Tha Pandiayan
11/12/2010 2:36:00 AM
11/12/2010 2:36:00 AM


By அண்ணாத்தம்பி
11/12/2010 12:32:00 AM
11/12/2010 12:32:00 AM


By PA Valarmathi
11/12/2010 12:04:00 AM
11/12/2010 12:04:00 AM


By PA Valarmathi
11/11/2010 11:49:00 PM
11/11/2010 11:49:00 PM