ஞாயிறு, 7 நவம்பர், 2010

கூட்டணி அறம்

கூட்டணி தர்மத்தால் காங்கிரஸ் கட்சிக்கு சங்கடம்: இளங்கோவன்


சென்னை, நவ. 6: மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கும் காரணத்தால், சில புகார்களுக்கு காங்கிரஸ் கட்சி "சப்பைக்கட்டு' கட்டும் நிலை உருவாகி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.தனியார் தொலைக்காட்சிக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் அவர் இக் கருத்தைத் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:மத்திய ஆட்சியில் பங்கேற்றுள்ள கட்சிகளில் தி.மு.க.வும் சேர்ந்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும்.ஆட்சியில் பங்கேற்றுள்ள காரணத்தால், காங்கிரஸ் கட்சி உரிய மரியாதை தருகிறது. பெட்ரோல் விலை உயர்வு போன்ற கொள்கை முடிவுகளில் தி.மு.க.வையும் கலந்து பேசித்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவால் பெரும்பான்மை பெறும் நிலை தமிழகத்தில் இருந்தாலும், தி.மு.க. அரசு எடுக்கும் முக்கியமான முடிவுகளின் போதுகூட காங்கிரஸ் தலைவர்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை.உதாரணமாக துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுவது பற்றி காங்கிரûஸ கலந்து ஆலோசிக்கவில்லை.மத்தியில் கூட்டணியில் உள்ள ஒரே காரணத்துக்காகத்தான், சில குறிப்பிட்ட புகார்கள் வந்தபோதிலும், நாங்கள் "சப்பைக்கட்டு" கட்டும் நிலை இருக்கிறது.கூட்டணி தர்மத்தால் காங்கிரஸ் கட்சிக்கு சங்கடம் ஏற்படுகிறது.தமிழகத்தில் ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை காங்கிரஸ் தொண்டர்கள் பிரதிபலிக்கும் போது சங்கடங்கள் உருவாகின்றன.இதனால் காங்கிரஸ் கட்சி தனித்துவத்தை இழந்து வருவது போன்ற தோற்றம் உருவாகி வருகிறது. அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக நான் குரல் கொடுத்து வருகிறேன்.காங்கிரஸ் தலைவர் சோனியா திருச்சியில் பேசியபோதும் இதே கருத்தை வலியுறுத்தினார். தனித்தன்மையை வளர்த்து முதன்மையான கட்சியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.தமிழகத்தைப் பொருத்தவரை தனித்து தேர்தலை சந்தித்து ஆட்சியைப் பிடித்த ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். 1967-ல் தி.மு.க. வென்றபோதுகூட, காங்கிரஸ் அல்லாத பல கட்சிகள் தி.மு.க. தலைமையில் கூட்டு சேர்ந்துதான் போட்டியிட்டன.எனவே ஒருமித்த கருத்து இருப்போர், மக்களுக்கு நம்பிக்கை உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை இருக்கிறது. நல்ல இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.இதுபற்றி மேலும் விரிவாகக் கூறுவதற்கு இன்னும் காலம் கனியவில்லை. விரைவில் இதுபோன்ற நல்ல சூழ்நிலை உருவாகும் என்று நம்புகிறேன்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திரைப்படத் துறையைப் போல அரசியலிலும் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என அவரது பிறந்தநாளில் வாழ்த்தி கேக் ஊட்டினேன். அதனால் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. நமது கட்சியில் இல்லை என்பதற்காக விஜயகாந்தை நாம் உதாசீனம் செய்யக் கூடாது.தனக்கு உள்ள பலத்தை விஜயகாந்த் சிதற விட்டுவிடக் கூடாது. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் இருப்பது சாதாரண விஷயமில்லை. இதை எப்படி நல்ல முறையில் பயன்படுத்தி கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று விஜயகாந்த் யோசிக்க வேண்டும் என்று அவர் கூறினார்."சில புகார்களுக்கு காங்கிரஸ் சப்பைக்கட்டு கட்டும் நிலை உருவாவதாக' கூறியது பற்றி இளங்கோவனிடம் "தினமணி' நிருபர் கேட்டதற்கு, அது யார் மீதான புகார்கள் என்பது நாட்டில் அனைவருக்கும் தெரிந்ததுதானே என்றார்.ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரைப் பற்றி குறிப்பிடுகிறீர்களா என்று கேட்டதற்கு, பதில் சொல்ல அவர் மறுத்துவிட்டார்.
கருத்துகள்

அதே போல் ஈழப்படுகொலைகளுக்காகக் காங்.கிற்கு வேறு வழியில்லாமல் கூட்டுப் பஙகாளி என்ற முறையில் தி.மு.க.வும் சப்பைக் கட்டுக்கட்டித் தீராப் பழியை ஏற்று வருவதையும் கோவன் நினைத்துப் பார்க்க வேண்டும். எந்த ஒரு சிறு கட்சியையும் கூட்டு சேர்க்காமல் காங். உண்மையிலேயே தனித்து நின்று தன்னுடைய செல்வாக்கு என்ன என்பதை உணர்ந்தால் நன்று. ஆளைப்பார்த்து அஞ்சாதே! ஊது காமாலை என்பது காங்.கிற்குப் பொருந்தும். எனினும் அதனை அழிக்கக் கோவன் ஒருவரே போதும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
11/7/2010 4:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திரு கோபிஅவர்களே! நான் ஆசிரியவுரைக்கு என் கருத்தைப் பதிந்துள்ளதைத் தாங்கள் காணவில்லையா? தமிழ்ப் போர்வையில் ஒளிந்து கொண்டு தமிழை அழிக்க எண்ணும் சிலரிடையே நம்மைப் போன்ற உணர்வாளர்களும் உள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி. பன்னாடை என்பது தீயதை வடிகட்டி நல்லதைப் பெற உதவும் ஒன்று எனத் தெரியாத மேதைகள் சிலர் தெய்வப்புலவரின் பெயரைச் சிதைப்பதால் தெய்வக் குற்றத்திற்கு ஆளாகிறார்கள். விரைவில் அவர்களைத் தெய்வம் தண்டிக்கும். பண்பிலிகள் மறையட்டும்! அன்புள்ளங்கள் பெருகட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
11/7/2010 8:46:00 AM
எங்கள் கட்சிக்கு தொண்டர்கள் தேவை... தகுதியான (உங்கள் சகோதர/சகோதிரிகளுக்கு எதோ நேர்ந்தாலும் எங்கள் கட்சிக்காக கோசம் போடணும், சுயமா சிந்திக்ககூடாது, சிலை கழுவி விட வேண்டும், எங்கள் தலைவர் பேரன்களுக்கு அடிவருடியாக இருக்கவேண்டும். மொத்தில் ஒரு சுடு சொரணை இல்லாதா எருமை மாடு போல இருக்க வேண்டும்...) தொண்டர்கள் வரவேற்க படுகிறார்கள்.
By இளங்கோ(வன்)
11/7/2010 8:46:00 AM
கட்சிக்கும் நாட்டுக்கும் உதவாத அக்கறையைக் காலதாமதமாகவும் பயன்படாமலும் செய்து தன்னையும் கட்சியையும் வளராமல் பார்த்துக்கொண்டு தான் பாதுகாப்பாக இருக்கும் தந்திரம் வாழப்பாடி வழியில் வரும் இவர்களுக்கு அவசியம். அவர் செய்த சரித்திர சாதனைகளின் எச்சத்தை இவர் செய்கிறார்.
By nalan
11/7/2010 8:43:00 AM
ஊழலை நாட்டில் விதைத்தது முதன் முதலில் காங் தான். நேரு காலத்திலேயே இது ஆரம்பித்தது.ஆனால் தி மு க ஆட்சிக்கு வந்தவுடனேயே ஆரம்பித்தது.தேசிய கட்சியான காங் என்றும் குறுகிய நோக்குடைய மு க விடம் கூட்டணியில் இருக்கும்போது பின் பாட்டு பாடத்தான் வேணும்.ஆனால்,ஈழத்தில் முகவை தன்க்கு பின்பாட்டு பாடவைத்தது,காங் சாமர்த்தியமல்ல.அது அவரின் குடும்ப நலன் கருதி செயல் பட்டது காரணம்.
By CHARLES
11/7/2010 8:40:00 AM
This news is dedicated to Pannadai Ilakkuvan Kurulolluvan. உடல் நலக் குறைவால் வல்லெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சசை பெற்றுவரும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார், வெளிநாடுகளில் உள்ள அவரது பிள்ளைகள் பார்க்க விரும்புவதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை முன்வைத்ததாகவும், அதனை அரசு முற்றிலும் மறுத்ததாகவும் இந்திய இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு எம்.கே.கிவாஜிலிங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து அவர் தெரிவிக்கையில் :-பார்வதியம்மாளின் பிள்ளைகள் பாதுகாப்பு அச்சம் காரணமாக நேரடியாக வந்து பார்க்க விருப்பம் தெரிவிக்கவில்லை. அதேபோல அவர்களது குழந்தைகளையோ, பேரப்பிள்ளைகளையோ அனுப்புவதற்கோ அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையிலே அரசாங்கத்துடைய அனுமதியென்ற பேச்சுக்கே இடமில்லை. இந்நிலையிலே அவர்கள் வருவதற்கு விருப்பம் தெரிவித்தால் தான், ஏனையவையெல்லாம், ஆகவே அரசாங்கத்திடம் நான் கோரிக்கை முன் வைத்தேன் என்பது தவறு. என்றார்
By Also Tamil
11/7/2010 8:25:00 AM
”சப்பைகட்டு” கட்டுவது டெலிபோன் ஊழலில் என்பது ஊரறியும்! இது தான் ஆட்சியை நம்பி ஒப்படைத்த மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்யும் நன்றிகடன்!! திருடர்களுக்கு துணைபோக மக்கள் நலனை பலிகொடுக்கும் நாட்டு நலனில் துளியும் அக்கரை கிடையாது . சோனியாவின் துயரம் ஒன்றே நாட்டு துயரமென கருதி செயல்படும் தமிழக காங்கிரஸ்காரன் ஒரு மூடன் இவன் அதில் ஒரு கூட்டத்திற்கு தலைவன்.
By Unmai
11/7/2010 7:49:00 AM
அதே போல் ஈழப்படுகொலைகளுக்காகக் காங்கிரசிற்கு வேறு வழியில்லாமல் கூட்டுப் பஙகாளி என்ற முறையில் தி.மு.க.வும் சப்பைக் கட்டுக்கட்டித் தீராப் பழியை ஏற்று வருவதையும் இளங்கோவன் நினைத்துப் பார்க்க வேண்டும் இவர் தோற்க இவர் வாயால் ஈழ தமிழர்களை விமர்சிதததைகுறிப்பிடலாம்..
By GIRI ANAGAI
11/7/2010 7:31:00 AM
என்ன இளங்கோவன் தி மு க மட்டுமா கொல்லை அடிக்கிறான் நீங்க அடிக்கலயா ? தி மு க விற்க்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் , உங்கலுக்கு காமன்வெல்த் ஊழல் , எனக்கு தெரின்சு தி மு க , காங்கிரசு ரென்டுமெ கடந்த 50 வருசமா கொல்லை தானடா அடிகிரீங்க. நீமட்டும் உத்தமன் மாதிரி பேசுறியே இளங்கோவன் ?...
By J.Eswaran
11/7/2010 7:16:00 AM
இந்த மெண்டல் கேஸ் இளங்கோவனால் பெரியார் குடும்பத்துக்கே தர்மசங்கடம், தலைக்குனிவு. இந்த ஆளின் பேச்சுக்கு நல்ல முறையில் கருத்துத் தெரிவிப்பது வேஸ்ட். இந்த ஆளை தயவு செய்து ignore பண்ணுங்கள். தினமணி வேண்டுமானால் ஜெயா அம்மாவுக்கு உதவுபவன் என்று முக்கியத்துவம் கொடுக்கட்டும்.
By வச்சா குடுமி
11/7/2010 6:54:00 AM
இலக்குவனார் ஜயா தலையங்கத்துகு தங்களின் கருத்தை எதிர்பார்த்தேன்.
By Gopi,Tiruttani
11/7/2010 6:37:00 AM
யோவ் ...என்னைய்யா பேசுற !....என்ன தர்ம சங்கடம் அது ?...கற்பழிப்பதை விட கற்பழிக்க விளக்கு பிடிப்பது மிகப் பெரிய குற்றம் ! கற்ப்பழிப்பவனை விட கற்பழிக்க விளக்கு பிடிப்பவன் மிகப் பெரிய குற்றவாளி !!! @........
By கொடி காத்த குமரன் !
11/7/2010 5:43:00 AM
இளங்கோவன்: "தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திரைப்படத் துறையைப் போல அரசியலிலும் நல்ல இடத்தைப் பெற வேண்டும். தனக்கு உள்ள பலத்தை விஜயகாந்த் சிதற விட்டுவிடக் கூடாது. இதை எப்படி நல்ல முறையில் பயன்படுத்தி கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று விஜயகாந்த் யோசிக்க வேண்டும்” ……….. சபாஷ் இளங்கோவன், நன்றி.
By பன்ருட்டி ராமச்சந்திரன்
11/7/2010 5:07:00 AM
இவர் தேமுதிக வை வளர்க்க நினைக்கிறாரா இல்லை காங்கிரஸையா?
By K Rajan
11/7/2010 4:55:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக