புதன், 10 நவம்பர், 2010

தற்காப்புக்காக எடுத்த நடவடிக்கை: சைலேந்திரபாபு பேட்டி

செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு.
கோவை, நவ. 9: போலீஸôரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், தற்காப்புக்காகத் திருப்பிச் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு கூறினார்.இச்சம்பவம் குறித்து மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியது: போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மோகன்ராஜ், மனோகரன் இருவரும் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். கொலை சம்பவம் நடந்த உடுமலைப்பேட்டை பகுதிக்கு விசாரணைக்காக இருவரையும் செவ்வாய்க்கிழமை காலை அழைத்துச் சென்றோம். ஈச்சனாரி ரயில்வே கேட் மூடியிருந்ததால், மாற்று வழியில் அழைத்துச் செல்லப்பட்டனர். காலை 5.30 மணிக்கு வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் வாகனம் சென்றபோது மோகன்ராஜ், எஸ்.ஐ ஜோதியிடம் இருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு வண்டியை கேரளாவிற்கு விடுமாறு மிரட்டியுள்ளான். துப்பாக்கியைப் பறிக்க முயன்ற போலீஸôரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் எஸ்ஐ முத்துமாலைக்கு அடிவயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது. எஸ்ஐ ஜோதிக்கு இடது தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது. நிலைமை மோசமாவதைக் கண்ட இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்ஐ முத்துமாலை இருவரும் தற்காப்பிற்காக மோகன்ராஜை சுட நேர்ந்தது. சப் இன்ஸ்பெக்டர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.
கருத்துகள்

ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துல்ல. விடியும் முன்னரே இருட்டில் குற்றம் சாட்டப்பட்டவரைக் கடத்திக் கொண்டு போவது போல் வெளிய அழைத்துச் செல்ல வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? ஊர்தியில் அமர்ந்திருக்கும் ஒருவனைக் கையிலோ காலிலோ சுடலாமே. மரணத் தண்டனை கொடுக்கும் பொறுப்பு காவல்துறைக்கு இல்லை. அழைத்துச் சென்றவர்கள்., காவல் கண்காணிப்பாளர் வரையிலான மேல் அலுவலர்கள் ஆகியோரை உடனே பணியிடைநீக்கம் செய்ய வேண்டும். இத்தகைய சுற்றி வளைப்புப் படுகொலையை நீதிமன்றங்கள் கண்டித்துள்ளன.இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி காவல் துறை மீது நடவடிக்கை எடுப்பதுதான். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2010 2:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக