புதன், 10 பிப்ரவரி, 2010

என் கணவரின் உயிருக்கு ஆபத்து: பொன்சேகா மனைவி கண்ணீர்



கொழும்பு,பிப்.9: ​ இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட என்னுடைய கணவர் சரத் பொன்சேகா இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை;​ அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன் என்று அவருடைய மனைவி அனோமா கண்ணீருடன் பேட்டி அளித்தார்.​ ​ தலைநகர் கொழும்பில் சில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்க்கிழமை இரவு விவாதித்துக் கொண்டிருந்தபோதே அவரை ராணுவ அதிகாரிகள் சிலர் சிறிய படையுடன் வந்து கைது செய்தனர்.​ அவர்கள் அந்த அறைக்குள் வரும்போதே கதவை உடைத்துக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள்.​ என்னை ஏன் கைது செய்கிறீர்கள்,​​ என்னைக் கைது செய்ய வாரண்ட் இருக்கிறதா,​​ ராணுவத்திலிருந்து விலகி சாதாரண சிவிலியனாகிவிட்ட என்னைக் கைது செய்வதாக இருந்தால் போலீஸ் அதிகாரிதான் வரவேண்டும் என்றெல்லாம் மறுத்த பொன்சேகாவை அந்த அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.​ ​​ எங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு கைதாக உடன்பட்டால் அதிக சேதம் இல்லாமல் உங்களை கூட்டிச் செல்வோம்,​​ இல்லாவிட்டால் பலத்தைக் காட்ட வேண்டியிருக்கும் என்று ஒரு அதிகாரி குரலை உயர்த்தி எச்சரித்ததோடு அவரது கையில் விலங்கை மாட்டி தரதரவென்று இழுத்துச் சென்றார்.​ அப்போது உடன் இருந்த பிற அரசியல் தலைவர்களும் தலையிட்டு அதைத் தடுக்க முயன்றனர்.​ ஆனால் ராணுவ அதிகாரிகளோ தடுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அவர்களைத் தங்களுடைய பார்வையாலேயே எச்சரித்துவிட்டு பொன்சேகாவையும் அவரது பத்திரிகைச் செயலரையும் கைது செய்து இழுத்துச் சென்றனர்.​ ​​ ​ அப்போது ஒரு ராணுவ அதிகாரி சரத் பொன்சேகாவின் பிடறியில் அடித்துக் கொண்டே சென்றதாக பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் பின்னர் நிருபர்களுக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தார்.​ என் கணவரை ராஜபட்ச கைது செய்வார் என்று எதிர்பார்த்தேன்,​​ ஆனால் இப்படி நாயை இழுத்துச் செல்வதைப் போல இழுத்துச் செல்வார்கள் என்று கனவில்கூட நினைக்கவில்லை என்று கூறி விம்மி அழுதார் அனோமா.​ ​ என் கணவரை அவர்கள் கைது செய்யவில்லை,​​ துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர் என்பதே உண்மை என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.​ பொன்சேகா இப்போது ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார் என்று கூறப்படுகிறது.​ இனி அவருடைய ஆதரவாளர்களும் தேச பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என்றும்,​​ பொன்சேகாவைப் பற்றி புதிய குற்றச்சாட்டுகளைக் கூறினால் உங்களை விட்டுவிடுகிறோம் என்று ஆசை காட்டி அவருடைய ஆதரவாளர்களில் சிலரை அவருக்கு எதிராகத் திருப்ப முயற்சி செய்வார்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் அஞ்சுகின்றன.​ ​​ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றிக்கு பொன்சேகாவும் பொறுப்பு என்று ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும் கூறியதால்,​​ தனக்குப் போட்டியாக பொன்சேகா வந்துவிடக்கூடாது என்பதில் ராஜபட்ச குறியாக இருந்தார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.​ ​ ராஜபட்சவும் அவருடைய தம்பிமார்களும் இலங்கைப் போரைப் பயன்படுத்தி அடித்த கொள்ளையையும் ஊழலையும் பற்றிப் பிரசாரத்தில் பேசினார் என்பதற்காக அவர் மீது கடும் கோபம் கொண்டார் ராஜபட்ச.​ அத்துடன் ராஜபட்ச அரசின் ஊதாரித்தன நிர்வாகத்தால் விலைவாசி உயர்ந்து மக்களின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்துவிட்டதையும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 90% பேர் அமைச்சர்களாக இருந்து சுகபோக வாழ்க்கை வாழ்வதையும் அவர் ஒப்பிட்டுப் பேசினார்.​ எல்லாவற்றுக்கும் மேலாக,​​ ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் குறித்து தனக்குத் தகவல் தெரிவிக்காமல்,​​ சர்வதேச உடன்பாடான ஜெனீவா கோட்பாட்டுக்கு முரணாக சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று அவர் கூறிய கடுமையான குற்றச்சாட்டு மனித உரிமைகள் அமைப்புகளால் பேசப்பட்டு இலங்கை அரசுக்குப் பெருத்த தருமசங்கடத்தை ஏற்படுத்தியது.​ அதிபரையும் அவருடைய தம்பியையும் போர்க்குற்றவாளியாகக் கருதி கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்தன.​ ​​ எனவே சரத் பொன்சேகாவை இனியும் விட்டுவைத்தால் நமக்கு ஆபத்து என்று கருதியே அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு,​​ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி,​​ ராணுவத்திலிருந்து ஓடியவர்களுக்கு சட்டவிரோதமாகப் புகலிடம் தந்தது ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இனி வெளியுலகையே பார்க்க முடியாதபடிக்கு தண்டித்துவிட இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.​ ​ பொன்சேகா மீதான வழக்கை சாதாரண நீதிமன்றங்களில் நடத்தினால் அவருக்கு மக்களிடையே ஆதரவு பெருகிவிடும் என்றும் தங்களுக்கு சங்கடம் தரும் பல உண்மைகள் வெளியாகிவிடும் என்றும் அஞ்சியே ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.​ ​ மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள இலங்கை அரசின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு கண்டித்திருக்கிறது.
கருத்துக்கள்

நல்லவேளையாக இதுவரை எட்டப்பன்களும் கருணாக்களும் கருத்தினைப் பதியவில்லை. வரலாறு இவ்வளவு விரைவில் திரும்பும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இனியாவது பொன்வேகாவைச் சார்ந்தவர்கள் (தமிழ் மக்கள்அளித்த வாக்குகளுக்கு நன்றிக் கடனாகவாவது) தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையான உயிர்ப்பறிப்பு முறைகளயும் இழைக்கப்பட்டு வரும் வன்முறைக் கொடுமைகளையும் உலகிற்குத் தெரியப்படுத்தித் தமிழ் மக்களிடம் மன்னி்ப்பு கேட்க வேண்டும். இதன் மூலம் சிங்களர்களில் ஒரு பகுதியினரேனும் மனம் மாறி வருந்தி இந்திய வழிகாட்டுதலுடன் கொடுநடைபோடும் இராசபக்சேவிற்கு இதே போன்ற நிலையை விரைவில் உருவாக்குவர். இலங்கையில் உண்மையான மக்களாட்சி முறை விரைவில் திரும்பட்டும்! தமிழ் ஈழம் உலக ஏற்பு பெறட்டும்! தனித்தனி உரிமையும் இறையாண்மையும் உடைய ஈழ-இலங்கைக் கூட்டமைப்பு தோன்றட்டும்! வெல்க ஈழத் தமிழர்கள்! தமிழ்த் தேசிய ஞாலத தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் அமையும் ஈழக் குடியரசால் பன்னாட்டு அவைகளில் தமிழ்க் கொடி பறக்கட்டும்! தமிழ்முழங்கட்டும்!

வீர வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/10/2010 2:14:00 AM

உண்மையான இன உணர்வாளர்களும் மனித நேயப் பற்றாளர்களும் எழுத எண்ணுவதையே திரு இராசனும் பிறரும் எழுதி உள்ளனர். நல்லவேளையாக இதுவரை எட்டப்பன்களும் கருணாக்களும் கருத்தினைப் பதியவில்லை. வரலாறு இவ்வளவு விரைவில் திரும்பும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இனியாவது பொன்வேகாவைச் சார்ந்தவர்கள் (தமிழ் மக்கள்அளித்த வாக்குகளுக்கு நன்றிக் கடனாகவாவது) தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையான உயிர்ப்பறிப்பு முறைகளயும் இழைக்கப்பட்டு வரும் வன்முறைக் கொடுமைகளையும் உலகிற்குத் தெரியப்படுத்தித் தமிழ் மக்களிடம் மன்னி்ப்பு கேட்க வேண்டும். இதன் மூலம் சிங்களர்களில் ஒரு பகுதியினரேனும் மனம் மாறி வருந்தி இந்திய வழிகாட்டுதலுடன் கொடுநடைபோடும் இராசபக்சேவிற்கு இதே போன்ற நிலையை விரைவில் உருவாக்குவர். இலங்கையில் உண்மையான மக்களாட்சி முறை விரைவில் திரும்பட்டும்! தமிழ் ஈழம் உலக ஏற்பு பெறட்டும்! தனித்தனி உரிமையும் இறையாண்மையும் உடைய ஈழ-இலங்கைக் கூட்டமைப்பு தோன்றட்டும்! வெல்க ஈழத் தமிழர்கள்! தமிழ்த் தேசிய ஞாலத தலைவர் மேதகு பிரபாகரன் தலைமையில் அமையும் ஈழக் குடியரசால் பன்னாட்டு அவைகளில் தமிழ்க் கொடி பறக்கட்டும்! தமிழ்ம

By Ilakkuvanar Thiruvalluvan
2/10/2010 2:13:00 AM

kadavulukku nanri

By lena pazha
2/10/2010 1:41:00 AM

IN THE NAME OF LAUGHING BUDDHA, SINGALAVA DOGS CARRIED OUT TAMIL ETHNIC CLEANSING. NOW THESE DOGS BITE ONE OVER EACH OTHER. LEAVE THEM TO KILL EACH OTHER. BY USING DIVIDE AND RULE POLICY THESE SINGALAVA DOGS WITH THE HELP OF TAMIL ETTAYAPANS KILLED OUR RACE. OUR FREEDOM IS NOT FAR AWAY. BEEING UNITED WE WILL LIBERATE OUR TAMIL HOMELAND. LONG LIVE TAMIL EELAM. LONG LIVE TAMIL.

By Paris EJILAN
2/10/2010 1:33:00 AM

many innocent people of Tamils soul is speaking now and it will speak against many singla people and then prabakaran's dream will be fulfiled velan - tamilnadu

By velan
2/10/2010 1:30:00 AM

all the happenings in sri lanka conducting by soniya ....sooniya....and manmohan singh .

By mami
2/10/2010 1:20:00 AM

இது ஒரு பெரிய கேடா? சரத் பொன்சேகா கைது செய்த தமிழ்க் குடும்பங்களின் கணவர்கள், பிள்ளைகள், பெண்பிள்ளைகள் எங்கே என்று 1000க்கணக்கான தமிழ்க்குடும்பங்கள் தவித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது புரிகிறதா தமிழ்க்குடும்பங்களின் வேதனையும், சோகமும். தலையிடியும், காய்ச்சலும் தனக்குத்தனக்கு வந்தால் தான் தெரியும். வலியைத் தந்தவனுக்கு அவ்வலியைத் திருப்பிக்கொடு. இறைவன் நினறு அறுப்பான் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் இப்போது இவ்வளவு சீக்கிரம் அறுப்பான் என்பது சிலவேளை கலியுகம் என்றபடியால் சீக்கிரம் நடத்துகின்றாரோ? முள்ளிவாய்ககாலில் குழறக்குழற கொன்றது சும்மாவிடாது. ஒன்றல்ல, இரண்டல்ல 70,000க்கு மேல். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்

By Rajan
2/10/2010 12:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
dinamalar
Front page news and headlines today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக