வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அறிவியல் விஞ்ஞானிகளுக்கு தனி அமர்வு: முதல்வருடன் ​மயில்சாமி ஆலோசனை



முதல்வருடன் மயில்சாமி அண்ணாதுரை சந்திப்பு
சென்னை, ​​ பிப்.11: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்துகள் பரிமாறப்படும் வகையில் தனி அமர்வுக்கு ஏற்பாடு செய்வது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆலோசனை நடத்தினார்.முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் வியாழக்கிழமை காலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.​ இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறியது:""நாசா போன்ற மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் தமிழில் படித்த விஞ்ஞானிகள் பலர் உள்ளனர்.​ அவர்கள் ​ தங்களது ஆராய்ச்சி உள்ளிட்ட விஷயங்களை செம்மொழி மாநாட்டில் தமிழிலேயே பரிமாறிக் கொள்வது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினேன்.இதற்கென 50 விஞ்ஞானிகள் வரை அமர்ந்து விவாதிக்க தனி அமர்வுக்கு ஏற்பாடு செய்வது குறித்தும் அவருடன் விவாதிக்கப்பட்டது."சந்திரயான் 2' விண்கலம் 2012 இறுதியில் அல்லது 2013}ம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும்.​ சந்திரனில் கனிமங்கள் இருக்கின்றனவா?​ என்பதை அறிய "சந்திரயான் 2' பயன்படுத்தப்படும்.​ இதன் அடுத்த கட்டமாக,​​ சந்திரனுக்கு மனிதனை அனுப்புவது குறித்து ஆய்வு நடத்தப்படும்'' என்றார் அவர்.
கருத்துக்கள்

தமிழ் வழி பயின்ற அறிவியல் அறிஞர்களைப் பங்கேற்கச் செய்வது பாராட்டிற்குரியது. ஆனால், தமிழ் வழியாகப் பயின்றவர்களையும் பயில எண்ணுபவர்களையும் ஊக்கப்படுத்த இது போதா. தமிழ் வழி பயின்றவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என அரசு நடைமுறைப்படுத்தினால் இப் பழைய வரலாறு எதுவும் தேவையில்லை. மொழிப் பாடமாகத் தமிழைப் படிப்பிக்கச் செய்வதைக் கூடத் தவணை முறையில் நிறைவேற்றும் அரசி்ற்கு முதலில் அவர் அறிவூட்ட வேண்டும். தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்து தமிழால் பயன்பெறுவோர் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தாமல் தமிழ்ப் பகை ஆட்சி வந்தா இதனை நடைமுறைப்படுத்த முடியும்? கட்டாயத் தமிழ் மொழிக் கல்வியையும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கல்வி முறையையும் உடனே நிறைவேற்ற வேண்டும். அல்லது தமிழ் முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டுக் கல்வி குறிர்த்துப் பேச வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/12/2010 2:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
dinamalar
General India news in detail

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக