புதன், 10 பிப்ரவரி, 2010

அனோமா பொன்சேகா கண்ணீரும் கம்பலையுமாகப் புலம்பல்

09 February, 2010 by admin

நேற்றைய தினம் சரத் பொன்சேகா இராணுவப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து இன்று தனது வீட்டில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவரது மனைவி அனோமா பொன்சேகா கண்ணீர்மல்க நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தாய்மாரையும் இளைஞர்களையும் குறிவைத்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தனது கணவர் சட்டத்திற்குப் புறம்பான ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதுதான் இலங்கையின் ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாய்மாரே இளைஞர்களே சகோதரிகளே எனக்கு உதவுங்கள் என்ற பாணியில் இந்த வேண்டுகோள் ஊடகங்கள் வாயிலாக விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகமே இல்லை எனத் தொண்டை கிழிய அங்குள்ள தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் உலகிற்குச் சொல்லிவந்தபோது, சிங்களம் எள்ளி நகையாடியது. தற்போது அதே அவர்களுக்கு திரும்பவும் நடக்கிறது.

இங்கு முக்கியமாக ஒரு விடயம் கவனிக்கப்படவேண்டும். சரத் பொன்சேகாவை அரசாங்கம் விடுவிக்காத பட்சத்தில் அனோமா பொன்சேகா களமிறங்குவார் என்பதில் ஜயமில்லை. அவர் பெண்கள் மற்றும் தாய்மார்களின் ஓட்டுக்களைக் கவரமுடியும். இந் நிலையை தமிழர்கள் சாதகமாக்கிக் கொள்வது அவசியம். புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகள் இது தொடர்பாக கவனம் செலுத்தி எதை எதைச் செய்வதன் மூலம், பிளவுபட்டுள்ள சிங்களம் மேலும் பிளவுபடும் என ஆராய்வது நல்லது.

Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 6951



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக