வியாழன், 11 பிப்ரவரி, 2010

பொன்சேகா கைது ​ ஜனநாயகப் படுகொலை: ரணில் விக்ரமசிங்கே



ஆலந்தூர், ​​ பிப்.​ 10:​ இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என்று இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.தில்லியில் இருந்து இலங்கை செல்லும் வழியில் புதன்கிழமை சென்னை விமான நிலையத்துக்கு ரணில் விக்ரமசிங்கே வந்தார்.​ அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை இலங்கை ராணுவம் கைது செய்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.​ முறைப்படி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.தேர்தல் முடிந்து 2 வாரங்களுக்குள் இது போன்ற செயலில் ஈடுபட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.​ பொன்சேகா விவகாரத்தில் இந்தியா தலையிடும் என்று நம்புகிறேன்.​ பொன்சேகாவை கைது செய்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கை அரசை கண்டித்துள்ளன என்றார் ரணில் விக்ரமசிங்கே.
கருத்துக்கள்

உண்மைதான். மறுப்பதற்கில்லை. ஆனால் இதுவரை தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் வன்கொடுமைகள் முதலியன அரங்கேறியுள்ளனவே! தொடர்ந்தும் இவை நடைபெற்றுக் கொணடிருக்கின்றனவே! இவ் வினப் படுகொலைகளை ஆதரிப்பது ஏன்? பொன்சேகா தொடர்பில் இந்தியா தலையிட்டதால்தானே அவர் இழுத்துச் செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளார். சேகா கைது செய்யப்பட்டதால்அம்பலமாகும் உண்மைகளில் அமெரிக்கா முதலான நாடுகளின் ஒத்துழைப்பு வெளியாகும என்ற அச்சத்தாலும் பக்சே சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளதாலும் தானே சேகாவின் கைதிற்கு இவை எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளுக்கும் வருந்திக் கண்டனம் தெரிவித்து தமிழ் ஈழத்திற்கு அங்கீகாரம் தர முன் வருக. அப்பொழுதுதான் இலங்கையில் மக்களாட்சி மாண்புறும். மனித நேயம் மலரும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar Thiruvalluvan
2/11/2010 2:58:00 AM

By bunkar prabha
2/11/2010 1:29:00 AM

ஜனநாயகம் என்றால் என்னங்க? இந்திய ராணுவம் வந்தபோது புலிகளை கைக்கூலிகளாக்கி துப்பாக்கியும், பாதுகாப்பும்,பணமும் கொடுத்து சண்டைபோடவைத்தீர்களே? அதுவா? அல்லது வெலிக்கடையில் தமிழ்க்கைதிகளைக் கொன்றீர்களே, அதுவா? ஆசியாவில் மிகப்பெரிய நூலகமான யாழ் நூலகத்தை எரித்தீர்களே, அதுவா? உங்கள் யுஎன்பி ஆட்சிக்காலத்தில் மட்டும் தமிழ்மக்கள்மீது இனக்கலவரங்களை உருவாக்கினீர்களே, அதுவா??????

By Ravi
2/11/2010 12:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக