ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

மன்னிப்பு கோரினார் ஜெயராம்



தமிழ்ப் பெண்களை அவதூறாக பேசியதாக சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஜெயராம் சென்னையில் சனிக்கிழமை மன்னிப்பு கோரினார். வளசரவாக்கத்தில் தாக்கப்பட்ட அவரது வீட்டி
சென்னை, பிப்.6: தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தி பேசிய நடிகர் ஜெயராம் மன்னிப்பு கோரினார். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழகப் பெண்களைப் பற்றி இழிவான வார்த்தைகளை நடிகர் ஜெய்ராம் தெரிவித்ததாக தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது.வழக்குகள் தொடரப்பட்டதுடன், வளசரவாக்கத்தில் உள்ள ஜெய்ராமின் வீடும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தி பேசவில்லை என்றும், மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன் என்றும் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் கேரளத்தில் இருந்து சனிக்கிழமை சென்னை திரும்பிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ""சென்னையில்தான் 18 வருடங்களுக்கு மேலாக வசிக்கிறேன். தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தினால் அது என் தாயை இழிவு படுத்துவதற்கு சமம் என நினைத்துக் கொள்பவன். டி.வி. பேட்டியில் நான் பேசிய வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளன. நான் நடித்த படங்களில் இதுவரை தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகள் இல்லை. நான் பேசிய வார்த்தைகள் தமிழ்த் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் மீண்டும் கைகூப்பி வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார். புகார் வாபஸ்: தனது பேச்சுக்கு நடிகர் ஜெய்ராம் மன்னிப்புக் கோரியதையடுத்து, அவர் மீது அளிக்கப்பட்ட அவதூறுப் புகாரை வாபஸ் பெற உள்ளதாக சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் கே.பாலு அறிவித்துள்ளார்.
கருத்துக்கள்

உண்மையிலேயே மனம் உருகி மன்னிப்பு கேட்டுள்ளார் என நம்புவோம். எனவே, இனி செயராம், தன்னுடைய பேச்சின் எதிர்விளைவால் ஏற்பட்ட நிகழ்வுகளுக்காகச் சிலர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். 2.) தான் கூறிய குறிப்பு எந்தத் திரைப்படத்தில் வந்தததோ அத்திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதையாசிரியர், உரையாடல் எழுதியவர், வெளியிட்டவர்ஆகியோர் மீது தன் அன்னைத் தமிழ்ப் பெண் என்பதால் உடனே காவல்துறையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். அதுவே அவர் பேசிய பேச்சிற்குக் கழுவாய்-பரிகாரம்- ஆகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 11:42:00 AM

தமிழண்ணா கருப்பு இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.அதை இழிவு படுத்தும் வகையில் எவன் பேசினாலும் அவனை செருப்பாலே அடிக்கணும் மன்னுப்பு மண்ணாங்கட்டி இதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.அப்போ மண்ணு மாகன், காந்தி, கலாம் போன்றவர்களை இழிவு படுத்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டாம் ஏற்றுக் கொள்வார்களா?தமிழக முதவருக்கும்தான் இந்த செய்தி!

By பிரதிபலிப்பு
2/7/2010 11:33:00 AM

தமிழ்ப்பணிப்பெண்ணை எருமை என்று சொல்லிவிட்டு மன்னிப்பும் கேட்டுவிட்டதால் மன்னித்துவிட்டு, அவர் வீட்டில் யாரும் பணிசெய்யாமல் தவிர்க்களாம். ஆனால் கண்ணனையும் த்ரொளபதியையும் கடவுலாய்க் கொண்டாடும் இராமாயண தமிழ் குரங்கர்களுக்கு கண்ணகியின், ஒவ்வையின் பெருமையையும் வள்ளுவனின் வல்லமையும் எவ்வாறு தெரியும்?

By கீரன்
2/7/2010 11:22:00 AM

உண்மையில், நம் தமிழ் படங்களிலும் நகைச்சுவை என்ற பெயரில் எல்லை மீறி போகின்றனர்...கறுத்த பெண்களை, அழகில்லாத பெண்களை பொதுவாக கவர்ச்சி இல்லா பெண்களை நகைச்சுவை என்ற போர்வையில் என்ன பாடு படுத்துகின்றனர் நம் தமிழ் சினிமா துறையினர். பாவம் சார்,...நையாண்டி செய்து அவர்களை தாழ்த்தி அசிங்கபடுத்துகின்றனர். நம் அக்காள், தங்கை, மகள் என்று எத்தனை பேர் இதனால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்...கொஞ்சம் சிந்திப்போம். இது மட்டுமா? இதே நகைச்சுவைகாக வயதில் பெரியவர்களை, முதியவர்களை சினிமாவில் விவேக், வடிவேல் போன்றவர்கள் சிறுமை படுத்துவதும், 'பெரிசு' என்று கூறி மரியாதை குறைவா அவர்களை சினிமாவில் சித்தரிப்பதும் பல நேரங்கலில் மனத்தை பாதிக்கின்றன....சினிமா நகைச்சுவை இயக்குநர்களுக்கு பொறுப்பு அதிகம் வேண்டும்..

By Manithan
2/7/2010 11:20:00 AM

thamiz cinimavil thamiz nadikar,nadikaikale ellai indru,thayarppaarkalee,iyakkunarkalee,thamizarkalukku vaaippalithu thamizarkalai vaazavidunkal,thamiz vaasanaiya theriyaathavar pinnaadi alaiyathirkal,intha ulakil ilichavayan thamizan.uzaikka maddumee therintha anupavikka theriyatha appaavikal.

By thangapandiyan
2/7/2010 10:44:00 AM

thamiz cinimavil thamiz nadikar,nadikaikale ellai indru,thayarppaarkalee,iyakkunarkalee,thamizarkalukku vaaippalithu thamizarkalai vaazavidunkal,thamiz vaasanaiya theriyaathavar pinnaadi alaiyathirkal,intha ulakil ilichavayan thamizan.uzaikka maddumee therintha anupavikka theriyatha appaavikal.

By thangapandiyan
2/7/2010 10:40:00 AM

சினிமாகரன் ஆடும் நாடகம் அரசியல் வாதி சொன்னால் சும்மா இருக்கும் மக்கள் சினிமா காரன் சொன்னால் ஏன் பொங்க வேன்டும் கமெடி என்ற பெயரில் ஆபாசமாக பேசுகிரார்கலே அது மட்ட்டும் சரியா?

By THAMIL MANI
2/7/2010 10:35:00 AM

he can show his protests only with actor like jayaram. can he go to rajnikanth who later apologised for the words he used in kaveri issue. VOORUKKU ILAICHAVAN PILLAIYAR KOIL AANDI.

By muthu
2/7/2010 9:30:00 AM

where had this seeman gone when the tamils in srilanka were killed. he was simply keeping statements in hideouts. did he dare to go the houses/bungalows of the politicians and express his protests. he is making cinema / drama out of this and want to creat a scene that he is a big xaviour of tamils. he can show his protests only with actor like seeman. can he go to rajnikanth who later apologised for the words he used in kaveri issue. VOORUKKU ILAICHAVAN PILLAIYAR KOIL AANDI.

By muthu
2/7/2010 9:28:00 AM

We, people and media need to change. Please do not give importance to all these things. Now Seeman will become hero and we can even think of giving him some title "Tamizhina Padhukavalan" (hope this title is not already given). When we are going to change? Really sorry state of affairs.

By Raja
2/7/2010 8:10:00 AM

MALAYALA ACTORS ALWAYS CRITISED TAMILNADU LADYS IN KERALA T V AND CINEMA.......NEXT THEY PRAY FOR BURDEN...IT IS USUAL..... THEY MUST BE PUNISHED....UNFORTUNATELY OUR CINE FIELD IS DOMENATING BY OTHER STATE ACTORS....TN GOV ALSO SUPPORTING THEM....IT IS A FATE OF TAMILAN

By avudaiappan
2/7/2010 7:20:00 AM

Who cares what these Mallus say about TN and people of TN?! People Seeman to stay in the limelight make issues like this a big deal. I would suggest Seeman to be more productive and make some decent successful movies.

By asdkjfh
2/7/2010 7:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக