சென்னை, பிப்.10: நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் சீமானுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழ்ப் பெண்கள் குறித்து இழிவான கருத்துகளை நடிகர் ஜெயராம் தெரிவித்ததாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டின் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக, நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குநருமான சீமான் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, ""ரூ. 25 ஆயிரத்துக்கான இருநபர் ஜாமீன் தாக்கல் செய்ய வேண்டும். இரண்டு வாரங்களுக்கு தினமும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும்'' என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் முன்ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.
கருத்துக்கள்
மறப்போம் மன்னிப்போம் எனச் சொன்ன முதல்வர் சீமான் முதலானவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். ஒரு சாராரை மட்டும் மன்னிப்பது நடுநிலை பிறழ்ந்த செயலாகும். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய குற்றவாளியை மன்னிக்கும் பொழுது இன உணர்வு எழுச்சியில் கிளர்ந்தெழுந்தவர்களை மன்னிப்பதே சிறப்பாகும். திருக்குறள் பேரொளி விருது பெற்றதை முன்னிட்டாவது வழக்குகளை உடன் திரும்பப் பெற முதல்வர் அவர்கள் முன்வர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar Thiruvalluvan
2/11/2010 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
2/11/2010 3:04:00 AM