ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

௨ கோடி என்பது மிகவும் குறைவான தொகை. கலை பண்பாட்டுத்துறையில் 100க்கும் குறைவான பணியிடங்களை முறைகேடாக நிரப்பியதிலேயே பல கோடிச் சம்பாதித்திருக்கும் பொழுது ௫ மடங்கு பதவி எண்ணிக்கைக்கு ஒரு ௧௦ கோடியாவது தர வேண்டாவா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++

டீ கடை பெஞ்ச்
பிப்ரவரி 07,2010

Special news today

"டான்ஸ்' ஆடிய பெண் கலெக்டருக்கு, "டோஸ்!' ""எப்படியாவது சம்பாதிச்சே ஆகணும்னு முயற்சி எடுத்துட்டு இருக்காரு வே...!'' என விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.



""அரசியல்வாதியா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.



""இல்லை வே... வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் ஐ.டி.ஐ.,களில் 330 ஜூனியர் பயிற்சி அதிகாரிகள், 280 லேப் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல் அளிச்சிருக்கு... இப்ப ஆட்களை எடுத்தா நிறைய நிர்பந்தங்கள் வரும்ன்னு நினைச்சு, துறை கமிஷனர், விவகாரத்தை ஒத்தி வைச்சிட்டாரு...



""ஆனா, இந்த துறையில இணை இயக்குனரா வேலை பார்த்து ரிட்டையர் ஆன ஒருவர், துறை அமைச்சரை அணுகியிருக்கார்... "ரெண்டு கோடி ரூபாயை தந்துடறேன்... எல்லா இடங்களையும் நானே நிரப்பிக்கறேன்'னு பேச்சுவார்த்தை நடத்திருக்கார்...



""இதுக்காக, நியமனக் குழு போட்டு, அதன் தலைவரா தன்னை நியமிக்கும்படி, தினமும் அமைச்சர்கிட்ட கேட்டுட்டு இருக்காரு... அமைச்சர் எந்த பதிலும் சொல்லலை... ஆனா, ரிட்டையர்டு அதிகாரி, முயற்சியை கைவிடலை வே...'' என்றார் அண்ணாச்சி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக