வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

காங்கிரசுடன் நல்லுறவு:​ திமுக உறுதி



டி.ஆர்.பாலு
சென்னை,​​ பிப்.11: காங்கிரஸ் கட்சியுடன் நல்லுறவு நிலவி வருவதாக திமுக உறுதிபடத் தெரிவித்துள்ளது."காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்,​​ அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடுகளைச் செய்தது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாதான்' என்று முதல்வர் கருணாநிதி கூறியதாக செய்தி வெளியானது.இந்தச் செய்தி உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டது என்று திமுக கருத்துத் தெரிவித்துள்ளது.​ இதுகுறித்து,​​ அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,​​ ""பத்திரிகைகளில் வெளியான செய்தி மிகவும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாகவே திமுக கருதுகிறது.​ இந்தச் செய்திக்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.திமுக}காங்கிரஸ் இடையே நிலவி வரும் நல்லுறவு பாதிக்கும் வகையில் பரப்பப்படும் எந்தவித தவறான உள்நோக்கம் கொண்ட தகவல்களை மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்.​ இப்படிப்பட்ட பொய்யான தகவல்களை பரப்புவோரின் எண்ணங்களும்,​​ எதிர்பார்ப்பும் ஈடேறப் போவதில்லை'' என்று கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் கருத்து..."திமுகவுடன் உள்ள உறவு தொடரும்' என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.இதே கருத்தை அந்தக் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் சாந்தாராம் நாயக் தெரிவித்துள்ளார்.​ இது குறித்து,​​ தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் பேசினார்.அப்போது,​​ திமுக}காங்கிரஸ் இடையிலான உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்த சாந்தாராம் நாயக்,​​ ""கூட்டணி பற்றி காங்கிரஸ் மேலிடம்தான் முடிவெடுக்கும்.​ திமுக}காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது.​ எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளால் இந்த கூட்டணியைப் பிரிக்க முடியாது'' என்றார்.
கருத்துக்கள்

காங்கிரசு மீண்டு எழாதபடி பேரறிஞர் அண்ணா அதனை ஓட ஓட விரட்டினார். இன்றைய திமுகவோ பதவி ஆசைகளினால் அதன் அடிமையாக அதன் காலடிகளில் உள்ளது. கொலைகாரக் கூட்டணியில் இருந்து விலக முடியாதபடி ஊழல் அச்சுறுத்தல்கள் இருக்கலாம். ஆனால் இதே அச்சுறுத்தல்கள் இருக்கும் பிறக் கட்சிகள் மாநில நலன் என்று வரும் பொழுது காங்கிரசை எதிர்க்கின்றனவே! முதுகெலும்புடன் நிமிர்ந்து நடக்கும் அக்கட்சிளைப் பார்த்தாவது முடங்கிப் போய் முடமாகக் கிடக்கும் திமுக பாடம் கற்கக் கூடாதா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/12/2010 3:15:00 AM

Any new alliance idea is always precluded by such talks.Sonia and JJ have already decided he alliance.It's only a matter of time it will be announced. After the Tamil Conference, this will be announced. How long can Congress accomodate the DMK's arrogant behaviour in the Central Government. Already DMK's name is tainted in TN becuase of misrule, Law & Order problem, looting, murders,rowdyism, power outage, price rise, spending spree of government money, unsolicited Tamil Conference, CM's undue attention to cinema, ministers' insenstive approach to peoples' problems, insecurity to even a police officer etc.

By Mannan
2/12/2010 1:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக