தமிழ் ஈழத்தில் நடைபெற்ற பேரழிவுப் பேரவலங்களையும் இப்பொழுது நடைபெற்று வரும் மனிதஉரிமைகளுக்கு எதிரான வன் கொடுமைகளையம் மறக்கவில்லையா? அப்படியிருக்க வாய்க் கொழுப்பைப் போய்ப் பெரிதுபடுத்துவானேன்? இளித்த வாய்த் தமிழர்களுக்கு இன உணர்வு வரக் கூடாதே! ஆகவே, நீங்கள் தமிழர் என்பதையே மறந்து விடுங்கள். என்ற போதிலும் உண்மையாகவே வன்முறையைக் கையில் எடுக்காதீர்கள். எதிர்ப்பிலே தீவிரம் இருக்க வேண்டும். ஆனால், போக்கிலே வன்முறை இருக்கக் கூடாது. எனினும் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லும் முதல்வர் உணர்ச்சி வயப்பட்டவர்கள் செயல்களையும் இந்த முறை மன்னித்து விடட்டும். ஏனெனில், வாய்க்கொழுப்பின் எதிர் விளைவேயன்றித் திட்டமிட்ட செயல் அல்ல.அதே நேரம் செயராம் பேசிக் காட்டிய உரையாடல் இடம் பெற்ற திரைப்பட இயக்குநர். கதை ஆசிரியர்,உரையாடல் எழுதியவர், தயாரித்தவர், வெளியிட்டவர், முதலான அனைவர் மீதும் தமிழ அரசு வழக்கு போட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/7/2010 5:06:00 AM