புதன், 10 பிப்ரவரி, 2010

சர்வாதிகார ஆட்சி நடக்கும் குரல் ஒலித்ததாகத் தவறாகக் கூறப்பட்டுள்ளது என மறுத்த பொழுதும் அதனையே தொடர்பே இல்லாத இந்த இடத்தில் கூறுவதன் நோக்கம் என்ன? தான் காங்கிரசின் அடிமைதான் என்பதை மெய்ப்பித்து அமைச்சர்பதவியை மகளுக்கு வாங்கத்தான் என மக்கள் எண்ண மாட்டார்களா? முத்தமிழறிஞருக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்? அவரால் ஊட்டி வளர்க்கப்பட்டட உணர்வாளர்களுக்குப் பகையாக அவரே மாறலாமா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

-------------------------------------

Front page news and headlines today

சென்னை :பெண்ணாகரம் இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்படுவது தொடர்பாக, "வேலியே பயிரை மேய்கிறது' என தேர்தல் கமிஷன் மீது, தமிழக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.



அவரது அறிக்கை:ஒரு தனி மனிதன், செல்வாக்கு பெற்று, பணத்தாலோ, பலத்தாலோ, பராக்கிரமசாலியாக உயர்ந்து நின்றால், அல்லது தனி மனிதன் அல்லாமல், மேற்சொன்ன தகுதிகளுடன் ஒரு குழுவினர் தலையெடுத்து, தட்டிக் கேட்க ஆளின்றி, "தர்பார்' நடத்த முற்பட்டால், அது சர்வாதிகார ஆட்சியென்று, சரித்திரம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது."தனி நாடு கிடைத்தால், அங்கே எத்தகைய ஆட்சி நடத்துவீர்கள்' எனக் கேட்ட செய்தியாளர்களிடம், "ஐயத்துக்கு இடமின்றி, அங்கே சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும்' என்று ஒரு குரல் ஒலித்தபோது, ஆச்சரியத்தால் திடுக்கிட்ட நான், அதை அக்கணமே மறுத்து அறிக்கை விடுத்தவன் என்ற முறையில், இதை எழுதும் தகுதியைப் பெற்றிருப்பதாகவே கருதுகிறேன்.

தினமணி

ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதா?​​: தேர்தல் ஆணைய நடவடிக்கை​ கு​றித்து கரு​ணா​நிதி வேதனை



சென்னை, ​​ பிப்.9:​ தேர்​தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுமேயானால்,​​ "வேலியே பயிரை மேய்வதா?' என்று வேதனையுடன் கேட்கத் தோன்றும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து,​​ செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:""ஒரு தனி மனிதன் செல்வாக்கு பெற்று பணத்தாலோ,​​ பலத்தாலோ பராக்கிரமசாலியாக உயர்ந்து நின்றால் அல்லது தனி மனிதன் அல்லாமல் ஒரு குழுவினர் தலையெடுத்து தட்டிக் கேட்க ஆளின்றி ""தர்பார்'' நடத்த முற்பட்டால் அது சர்வாதிகார ஆட்சியென்று சரித்திரம் சொல்லிக் கொடுத்து இருக்கிறது.​ மக்களால்}மக்களுக்காக நடத்தப்படுகின்ற மக்களாட்சிக்கும்,​​ ஒருவர் நன்மைக்கே அல்லது ஒரு குழுவின் நன்மைக்கே இந்த உலகு உண்டு என்ற எண்ணத்துடன் நடத்துகின்ற ஆட்சிக்கும் இடையில் உள்ள வானளாவிய வேறுபாடுகளை வரலாற்று ஏடுகளில் படிக்கின்ற வாய்ப்பைப் பெற்றவர்கள் நாம்.​ எனினும்,​​ மன்னர் ஆட்சியில் மக்கள் மதிக்கப்பட்ட மாண்பினையும்,​​ மக்கள் ஆட்சிகளில் மன்னராட்சியை விட கேடுகள் நடந்த கொடுமைகளையும் எடுத்துக் கூற வரலாறுகள் தவறவில்லை.​ இன்று உலகம் அடைந்துள்ள பல்வேறு மாறுதல்களில்,​​ சிறிய நாடுகளாயினும்}பெரிய நாடுகளாயினும் அவற்றை நிர்வகிப்பதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குழுவினர் பொறுப்பேற்கிறார்கள்.​ தேர்தலில் வென்றிடாதவர்கள் எதிர் வரிசையில் இருந்து அரசாளும் குழுவுக்கு ஆலோசனைகள் கூறுகின்றவர்களாகவும்}தவறுகள் நேருமிடத்து தட்டிக் கேட்பதற்கான தகுதி உடையவர்களாகவும் விளங்குகிறார்கள்.​ இதற்கு நாம் வைத்திருக்கும் பெயர் ஜனநாயகம்.​ மக்களாட்சியின் மாண்பினை உணர்த்தும் ஒரு சொல் அது.​ அந்த மாண்பினை இந்திய நாட்டிலும்,​​ அதற்கு உட்பட்ட பல்வேறு மாநிலங்களிலும் கடைப்பிடித்து வருகிறோம்.​ ​ஜனநாயக முறையில் அங்கொன்றும்,​​ இங்கொன்றுமாக கீறல்கள் ஏற்படுவது உண்டு.​ அது தங்கத் தட்டில் விழுந்த கீறல் போல உருக்கி மீண்டும் ஒன்றாக்கிடக் கூடியது.​ சர்வாதிகாரத்தில் விழும் கீறல்கள்}பானையையே உடைக்கக் கூடியது.இந்த முறையில் போட்டியிடுவோர்களுக்கு இடையே குற்றம் குறைகள் இருக்கலாம்.​ ஆனால்,​​ அவற்றைச் சுட்டிக் காட்ட குற்றம் குறைகளைப் போக்கிட வேண்டிய பொறுப்பிலே இருப்பவர்கள் போட்டியை நடத்துபவர்களாக இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் வாய்மைக்கு முதல் இடம் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.​ பென்னாகரம் இடைத் தேர்தல்:​​ தமிழகத்தில் பென்னாகரத்தில் நடைபெற வேண்டிய இடைத் தேர்தலை எடுத்துக்காட்டாக வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.​ தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,​​ வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அழைக்கப்பட்டு}வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.​ ஆனால்,​​ அந்தத் தேர்தலில் போட்டியிடவே முன்வராத ஏழெட்டு கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மாநில}மாவட்ட,​​ வட்ட மற்றும் தொகுதியில் உள்ள அதிகாரிகள் அனைவரும் பரிசீலித்து வழங்கிய வாக்காளர் பட்டியலில் திடுமென பல்லாயிரவர் குறைந்து விட்டனர் என்ற ஒரு புகார் மனுவைப் பெற்றனர்.​ அது உண்மையா,​​ பொய்யா என்பதைப் பற்றிக் கூட எந்த அதிகாரிகளிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை.​ இரண்டாவது முறையாக இடைத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு விட்டது.​ அதாவது,​​ ஜனநாயகத்தின் கால் முடக்கப்பட்டு விட்டது.​ இதுபற்றி நான் சொல்வதை விட,​​ இடைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள பாமக,​​ "தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாக மதித்து செயல்படுகின்ற நடுநிலையில் இருந்து தவறியிருக்கிறது.​ இந்த குற்றச்சாட்டில் இருந்து அது தப்பிக்க முடியாது.​ தேர்தல் ஆணையத்தின் இந்த ஒரு சார்பு நிலை மிகவும் கண்டிக்கத்தக்கது' என்று கூறியிருக்கிறது.​ இது,​​ பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கையில் உள்ளது.​ ஜனநாயகத்தை வாய்மையுடன் காப்பாற்ற வேண்டியவர்கள்,​​ ராமதாஸ் கூறுவதைப் போல ஒரு தலைப்பட்சமாக காரியமாற்றுவார்களேயானால்;​ "வேலியே பயிரை மேய்வதா?' என்று வேதனையுடன் தானே கேட்கத் தோன்றுகிறது'' என முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

அப்பாடா! இராமதாசிற்கு மகிழ்ச்சிக் கீற்று தோன்றியிருக்கும். 2.) தினமணி செய்தியாளருக்கும் ஆசிரியருக்கும் மனமுவந்தபாராட்டுகள். இவ்வுரையில் தேவையற்ற முறையில்இது வரை தமிழ் ஈழத்தில் குடியாட்சி முறையையே நடத்தி வந்த மேதகு பிரபாகரன் சொல்லாத செய்தியைச் சொன்னதாகத் தேவையற்றுப் புகுத்தப்பட்ட அறிக்கைப் பகுதியை நீக்கியமைக்காக நடுநிலை எண்ணம் கொண்டவர்கள் சார்பாக நான் தினமணியைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/10/2010 4:01:00 AM

அடேய் கலைஞா! இந்தமாரி ஏமாத்து பேச்சை கேட்டு ரொம்பவே ஏமாந்துட்டோம். போடா!

By MOTTAI
2/10/2010 3:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக