செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

இதுவரை 2.1 லட்சம் தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர்



கொழும்பு, ​பிப்.8: இலங்கையின் வடக்குப் பகுதியில் இதுவரை 2.1 லட்சம் தமிழ் மக்கள் மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.​ வடக்குப் பகுதியில் தமிழ் மக்களை மறுகுடியமர்த்தும் பணி விரைவாக நடந்து வருகிறது.​ முகாம்களில் இன்னும் 70 ஆயிரம் பேர் உள்ளனர்.​ அவர்களும் அவர்களது சொந்த ஊர்களிலேயே விரைவில் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை வடக்குப் பகுதியின் மேம்பாட்டுத் திட்டத்துக்கான முதன்மை ஆலோசகர் சந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.​ புலிகளைத் தோற்கடித்தப் பின்னர் வடக்குப் பகுதியில் அமைதி திரும்பியுள்ளது.​ அன்றாட நடவடிக்கையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.​ இப்பகுதியில வளர்ச்சிப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று நினைத்து,​​ அதற்கான நடவடிக்கையையும் அதிபர் ராஜபட்ச தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.​ ஆனால்,​​ இதற்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுகின்றன என்றும் சந்திர பெர்ணான்டோ குற்றம்சாட்டினார்.​ 2010,​ ஜனவரி 31-ம் தேதிக்குள் முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களிலேயே குடியமர்த்தப்படுவர் என்று முன்னதாக இலங்கை அரசு தெரிவித்திருந்தது.​ ஆனால்,​​ வடக்குப் பகுதியில் கண்ணிவெடி மீட்புப் பணி இன்னும் சில பகுதிகளில் முடிவடையவில்லை.​ இதனால் உறுதி அளித்ததற்கேற்ப தமிழர்களை குடியமர்த்த முடியவில்லை.​ எனினும் அவர்களை விரைவில் ​குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்று சமீபத்தில் கூறியது.
கருத்துக்கள்

வாய்க்கு வந்த பொய்க் கணக்கைத் தெரிவிப்பது மட்டுமல்ல, ஒரு கொத்தடிமை முகாமிலிருந்து வேறொரு முகாமிற்கு மாற்றுவதையும் மறு குடியமர்த்தமாகக் கூறுகிறார்கள். இலங்கையில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் பொழுது இவர்கள் காப்பாற்றப்பட இந்த முகாம்கள் உதவுமோ? இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/9/2010 3:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
dinamalar: 0 ஆயிரம் இலங்கை தமிழர் குடியமர்த்தல் எப்போது? அரசு நடவடிக்கை பற்றி இலங்கை விளக்கம்

Front page news and headlines today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக