வியாழன், 11 பிப்ரவரி, 2010

ஆனால் தமிழ் ஈழ மக்களுக்கு எதிரான போர் நின்றதாகத் தெரிவித்த பொய் இதில் அடங்காது அல்லவா? தமிழ் ஈழ மக்களைக் காப்பாற்ற பொய் தேவையில்லை. அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் வன் கொடுமைகளையும் அவர்களுக்கு எதிரான இனப் படுகொலைகளையும் உணர்த்தி அவர்களைக் காப்பாற்றி யிருக்க வேண்டாவா? திருக்குறள் பேரொளியால் அக இருளை நீக்கி ஈழத் தமிழ் மக்களின் துயர இருளைப் ‌போக்குவாராக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

++++++++++++++++++++++

Latest indian and world political news information

சென்னை : ""யாருக்கும் தீங்கு செய்யாமல் நன்மை செய்ய வேண்டும் என்றால், பொய்யையும் சொல்லலாம். அந்தப் பொய் உண்மை இல்லை என்றாலும், அது வாய்மைக்கு இணையாகக் கருதப்படும் என திருவள்ளூர் கூறியுள்ளார்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார். உலகத் திருக்குறள் பேரவை சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு, "திருக்குறள் பேரொளி' விருது வழங்கும் விழா, தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்தது.
விருதை ஏற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது: எனக்கு விருது வழங்க வேண்டுமென, அடிகளார் நீண்ட நாட்களாக என்னை கேட்டுக் கொண்டிருந்தார். இந்த விருது தேவையா என அடிகளாரிடம் கேட்டேன். இது, எனது ஆசை என்று கூறினார். துறவிகளுக்கு ஆசை கூடாது; இருப்பினும் இந்த ஆசையை நிராகரிக்க முடியாது என சம்மதம் தெரிவித்து, விழாவில் பங்கேற்றுள்ளேன். எனக்கு, "திருக்குறள் பேரொளி' என்ற விருதை தந்துள்ளனர். திருக்குறளே பேரொளி தான். இந்த விருதை எனக்கு வழங்கியுள்ளதன் மூலம், என்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியுள்ளதாக நான் கருதவில்லை. ஒளியை கையில் கொடுத்து, அது மற்றவர்களுக்கு பயன்பட வேண்டுமென்று கொடுத்ததாகக் கருதுகிறேன்.
சட்டசபையில் நான் பணியாற்றும் போது, எப்படியெல்லாம் தமிழுக்கு பணியாற்றுவது எனக் கருதி, "சத்ய மேவ ஜெயதே' என்ற வார்த்தையை "வாய்மையே வெல்லும்' என்று மாற்றினோம். முதலில் அதற்கு எதிர்ப்பு இருந்தாலும், பிற்பாடு அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர். நான் எழுதிய குறளோவியத்தில், திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை கருத்தில் கொண்டு அதற்கு பொருள் வடித்துள்ளேன். எனக்கு முன் திருக்குறளுக்கு உரை எழுதிய பலர், அவர்கள் ஆத்திகர்களாக இருந்தால், ஆத்திக கருத்துகளையும், நாத்திகர்களாக இருந்தால், நாத்திக கருத்துகளையும் அதில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், நான் திருக்குறளின் உரையை திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை கருத்தில் கொண்டு, நாத்திகத்தை திணிக்காமல், ஆத்திகத்தை புறக்கணிக்காமல் எழுதியுள்ளளேன். நான் குறளோவியத்திலிருந்து ஒன்றிரண்டு சொல்ல விரும்புகிறேன். பலரும் உண்மையும், வாய்மையும் ஒன்று என்று என நினைக்கின்றனர். ஆனால், உண்மை வேறு, வாய்மை வேறு. உண்மை என்பது உள்ளதைச் சொல்வது. வாய்மை என்பது யாருக்கும் தீங்கு நேரக்கூடாது என்று உரைப்பது.
யாருக்கும் தீங்கு செய்யாமல் நன்மை செய்ய வேண்டும் என்றால், பொய்யையும் சொல்லலாம். அந்தப் பொய் உண்மை இல்லை என்றாலும், அது வாய்மைக்கு இணையாகக் கருதப்படும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதை, இங்கு கூடியுள்ள அறிஞர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்.இவ்வாறு முதல்வர் பேசினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக