வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

மனிதம் போற்றும் பணிகளை விரிவுபடுத்த வேண்டும்: போப்பாண்டவரின் ​ தூதுவர் பேச்சு



நாகப்பட்டினம், ​​ பிப்.​ 11:​ மதங்களைக் கடந்து மனிதம் போற்றும் பணிகளை திருச்சபைகளும்,​​ குருக்களும் விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார் போப்பாண்டவரின் தூதுவர் கிளவ்டியோ கார்டினல் க்யூமஸ்.​ ​ ​ நாகை மாவட்டம்,​​ வேளாங்கண்ணியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய குருக்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற போப்பாண்டவரின் தூதுவர் கிளவ்டியோ கார்டினல் க்யூமஸ் பேசியது:​ ​ ​ ​ இந்தியாவில் பல மதங்கள் உள்ளன.​ பிற மதங்களுடன் உரையாடி,​​ நட்பு பாராட்டி அனைவருடனும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு குருக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.​ ​ ​ கிறிஸ்தவ திருச்சபைகள் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.​ இந்தப் பணிகள்,​​ மதங்களைக் கடந்து மனிதம் போற்றும் பணிகளாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.​ மனித உரிமை,​​ நீதி ஆகியவற்றுக்கானப் பணிகள் விரிவடைய வேண்டும் என்றார் க்யூமஸ்.​ ​ ​ செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெற்ற இந்த மாநாட்டில்,​​ கிறிஸ்தவ திருச்சபைகளை மக்களின் சமுதாய முன்னேற்றதுக்கு வழிவகுக்கும் எழுச்சிக்கான சாதனமாகச் செயல்படுத்த வேண்டும்.​ மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள தலித் மற்றும் ஆதிவாசி மக்களின் மேம்பாட்டுப் பணிகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.​ ​ ​ ​ இயற்கையுடன் இணைந்து,​​ இயற்கையைப் பாதுகாத்து பராமரிக்கும் நடவடிக்கைகளுக்கு முனைப்புக் காட்டுவது என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டன.​ தானம் இயக்க இயக்குநர் ஜெர்ரி பரிந்துரைகளை முன்மொழிந்தார்.​ ​ ​ குருக்கள் ஆண்டு நிகழ்வாக நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 800 குருக்கள் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

தமிழ் ஈழததில் பேரினப் படுகொலைகள் நடைபெற்ற பொழுது கண்டித்துத் தடுத்த நிறுத்த முடியாத பொழுது அவ்வவலங்கள் தொடருவதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாத பொழுது மனிதம் போற்றும் பணிகளை விரிவு படுத்த வேண்டும் என்று கதை அளப்பது எதற்காக? சமயப் பரப்புப் பணிகளை விரிவு படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசித் தொலைக்க வேண்டியதுதானே! மதவாதிகளை நம்பாதீர்கள்! தொண்டுப் போர்வையில் மதவாதிகள் உலவவும் இடம்தராதீர்கள். எச் சமயமாயினும் அதில் உள்ள நன்னெறிகைளப் பின்பற்ற வேண்டியதைக் கடமையாகக் கொள்வோம். ஆனால், மதச் சட்டையை மாற்றுவதை அடியோடு நிறுத்துவோம். மதமாற்றம் என்பது பிற்காலத் தலைமுறையினருக்கு நாம் இழைக்கும் கேடாகும். அதற்கு இப்படிப்பட்ட பேச்சுகளே நம்மை ஏமாற்றும். எனவே, மனிதம் போற்றும் மனிதனாக, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் குறள் நெறியைப் போற்றும் நல்லுயிராகச் சாதி சமய வேறுபாடற்று வாழ்வோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/12/2010 3:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக