ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தமிழ்,​​ தமிழர் மீட்பு ​ நடைப்பயணக் குழுவுக்கு மயிலாடுதுறையில் வரவேற்பு



​ மயிலாடுதுறை,​​ பிப்.​ 6:​ நாகை மாவட்டம்,​​ மயிலாடுதுறைக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த தமிழ்,​​ ​ தமிழர் மீட்பு நடைபயணக் குழுவிற்கு மயிலாடுதுறையில் வரவேற்பளிக்கப்பட்டது.​ ​ ​ தமிழ்நாட்டில் தமிழை கல்வி மொழி மற்றும் ஆட்சி மொழியாக்க வேண்டும்,​​ தமிழ்நாடு எல்லைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலர் தோழர் தியாகு தலைமையில் மயிலாடுதுறைக்கு வியாழக்கிழமை வந்த தமிழ்,​​ தமிழர் மீட்பு நடைபயணக் குழுவினருக்கு ​ தமிழின ஆதரவாளர்கள் இயக்கம் சார்பில் வரவேற்பு மற்றும் பொதுக்கூட்டம் ​ ஆகியவை வெள்ளிக்கிழமை இரவு ​ நடைபெற்றது.​ ​ ​ ​ நிகழ்ச்சிக்கு ​ மயிலாடுதுறை செந்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தங்க.​ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.​ தமிழின ஆதரவாளர்கள் கே.கே.சுப்பிரமணியன்,ச.பிரேம்குமார்,எம்.எஸ்.ஜமீலுதீன்,செலவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​ ​ ​ கூட்டத்தில் தமிழ்,​​ தமிழர் மீட்பு ஆகியவற்றிற்க்காக நாகை,​​ திருவாரூர்,தஞ்சை மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு பாராட்டப்பட்டார்.​ ​ ​ ​ தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி பொதுச் செயலர் பெ.​ மணியரசன்,​​ மதிமுக மாவட்டச் செயலர் மா.​ மகாலிங்கம்,​​ தமிழர் தேசிய இயக்கம்,​​ நா,க ரகுபதி,​​ தமிழர் ​ உரிமை மீட்பு இயக்க மாநில அமைப்பாளர் பேராசிரியர் ரா.முரளிதரன்,​​ மதிமுக மாநில இளைஞரணி நா.ச.​ அழகிரி,​​ பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட அமைப்பாளர்நா.​ இளையராஜா,​​ பேராசியர் த.செயராமன் ​ ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கருத்துக்கள்

தமிழ் நாட்டில் தமிழ் தலைமை பெறுவதற்காகவும் தமிழர் முதன்மை பெறுவதற்காகவும் தமிழ்நாடு தமிழ்நாடாகத் திகழவும் பரப்புரை நெடும்பயணனம் மேற்கொண்டு வரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலர் தோழர் தியாகு அவர்களுக்கும் நடைப் பயணம் மேற்கொண்டு வரும் தொண்டர்களுக்கும் தொண்டர்களை வரவேற்கும் ஊர் மக்களுக்கும் பாராட்டுகள்.

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 11:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக