சென்னை, பிப். 11: தமிழில் சிறந்த மென்பொருள் தயாரித்துள்ள ""பனேசியோ டிரீம் வீவர்ஸ்'' நிறுவனத்துக்கு கணியன் பூங்குன்றனார் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்பொருளைத் தேர்வு செய்து அதை உருவாக்கியவருக்கு ""கணியன் பூங்குன்றனார்'' பெயரில் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் விருதும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படுகிறது.அதன்படி, 2007-2008-ம் ஆண்டின் விருதுக்குத் தகுதி வாய்ந்தவரைத் தேர்வு செய்ய தமிழக அரசு வல்லுநர் குழுவை அமைத்தது. தமிழக அரசின் கம்ப்யூட்டர் மொழிக் கொள்கைக்கு ஏற்பவும், போட்டிக்கு வரப்பெற்ற மென்பொருள்களுள் சிறந்ததாகவும் ""பனேசியோ டிரீம் வீவர்ஸ்'' நிறுவனத்தின் மென்பொருள் உள்ளது.எனவே, அதற்கு அரசின் ""கணியன் பூங்குன்றனார்'' விருது வழங்கப்படுகிறது. கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட உள்ள உலகத் தமிழ் இணைய மாநாட்டில் விருதினை முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.
கருத்துக்கள்
விருது வழங்கப்படும் முன் இந் நிறுவனத்தின் பெயரைத் தமிழில் மாற்றச் செய்ய வேண்டும். இல்லையேல் இவ்விருதை வழங்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/12/2010 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
2/12/2010 3:04:00 AM
any link to download the software...
பதிலளிநீக்கு