ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

அரசு ஊழியர்களுக்கு தொழிற்சங்கம்



நாகப்பட்டினம், பிப். 6: தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை அரசு ஊழியர்களுக்கு வழங்கக் கோரி, அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படவுள்ளது என்றார் அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் கோ. சூரியமூர்த்தி. இதுகுறித்து நாகையில் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி முதல்வர் வெளியிடும் ஆணைகளை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். இதேபோல, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவு இதுவரை அதிகாரிகளால் பின்பற்றப்படவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்புவதிலும் அரசு அதிகாரிகள் போதுமான முனைப்புக் காட்டுவதில்லை. எனவே, அரசு உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் மத்தியில் நிலவும் மெத்தனப் போக்கை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1,000 அரசு அலுவலர்கள் கண் தானம், ரத்த தானம், உடல் தானம் அளிக்கும் வகையில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி, வரும் 27-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது என்றார் அவர்.
கருத்துக்கள்

தொழிற்சங்கம் என்றால் கட்சித் தலைவர்கள தலைமைப் பொறுப்பை ஏற்று இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தொழிற் சங்கம் வைத்துப் பாழ்படுத்தி விடுவார்கள். எனவே, கவனம் தேவை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 4:25:00 A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக