வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

பிரபாகரன் இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் சட்ட சிக்கல்: இலங்கை அரசு தகவல்



கொழும்பு, பிப்.11: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் வழங்குவதில் பல்வேறு சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து இலங்கை தூதர் பிரசாத் கூறுகையில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் கடிதத்தை இந்தியாவிடம் இலங்கை அரசு வழங்கிவிட்டது என்றார்.பிரபாகரன் மரணம் தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் வழங்குவதற்கு சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால் அவரது மரணச் சான்றிதழை வழங்க பல்வேறு நடைமுறைகளும் கால அவகாசமும் தேவைப்படும் என பிரசாத் தெரிவித்தார்.மரணச் சான்றிதழுக்கு சமமான அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக பிரசாத் தெரிவித்ததாக இலங்கை இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துக்கள்

எத்தனையோ பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் சிங்கள இந்திய அரசுகளுக்குப் பொய்ச் சான்றிதழ் கொடுப்பதில் ஒன்றும் சிக்கல் இல்லை. ஆனால், அவர் தோன்றும்போது இறந்ததாகக் கூறப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்த சட்டச்சிக்கலைச் சரி செய்து விட்டுச் சான்றிதழைத் தரலாம். அல்லது அப்படியே இதனை மறக்கச் செய்யலாம் என எண்ணினால் விட மாட்டேன் என்கிறீர்களே! எனச் சிங்கள அதிகாரிகள் பேசிக் கொள்கின்றனராம்.

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/12/2010 2:30:00 AM

திரு.Ganessin தினமணி தமிழர்களிற்காக குரல்கொடுக்கும் பத்திரிக்கையா? சில தமிழர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை நிரூபிக்கும் பத்திரிக்கை. விமர்சனங்களின் தரத்தைப்பார்த்தாலே புரியவில்லையா? அதுசரி மஞ்ச பத்திரிக்கை என்று சொன்னீர்களே? அதை எங்கு படிக்கலாம்? கொஞ்சம் உங்கள் அனுபவங்களை அவுத்துவிடுங்களேன்! பிளீஸ்!

By T.Muttu
2/12/2010 12:14:00 AM

ஐயா ரவி அவர்களே, தினமணி உங்களுக்கு ஒத்துவராது. இது தமிழனுக்காக குரல் கொடுக்கிற பத்திரிகை. நீங்க பேசாம பொய் வேற எதாவது மஞ்ச பத்திரிக்கை படிக்கவும்.

By Ganessin
2/11/2010 11:52:00 PM

தினமணி ஏன் மேதகு(??) தேசிய(???) ஞால(????) தலை பிரபாவிற்கு இவ்வளவு முக்கியத்த்துவம் கொடுக்கின்றது என்று புரியவில்லை. இன்னமும் யதார்த்தத்திற்கு புறம்பாக கற்பனைக் கோட்டை கட்டும் சிலர் இருக்கின்றார்கள் என்று நிரூபிப்பதற்கோ? இங்கு பிரபாகரன் இருக்கின்றார் என்று எழுதிக்கொண்டிருக்கும் 'பொரிமாதோண்டிகளிற்கு' அவர் இருப்பர் என்பார்க்கு இருப்பர், இல்லை என்பார்க்கு இல்லை என்ற நிலையை அடைந்து பல மாதங்களாகி விட்டது. உங்களின் மனஉளைச்சல் நன்றாகவே புரிகின்றது. இவர்களின் வியாதிகள் நீங்கி மீண்டு வர ஒரு வடிகாலாக இருக்கும் தினமணிக்கு நன்றிகள்.

By Ravi
2/11/2010 11:13:00 PM

india thodarnthu seiyum thavarukal makkalai pathikkamal irukkavendum.

By appu
2/11/2010 11:10:00 PM

சட்ட சிக்கல் சாமானிய மக்களுக்குத்தான். இரண்டு அரசாங்கம் இந்த சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிப்பது ஆச்ரியம் அளிக்கின்றது. இதை நம்பினால் இதை விட முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை.

By மு சந்திரசேகரன்
2/11/2010 11:07:00 PM

முட்டாள் இந்திய அரசு !லூசு சிங்களம்! இரண்டும் செந்தால் கலண்டு திரியும் எருமைகள்

By uasnthan
2/11/2010 10:46:00 PM

Dai Sumi Kumaran, UK nee Africa vil iruka vendiyan da!

By karuna
2/11/2010 10:10:00 PM

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை. எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர். அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார். சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார். எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தி

By Sumi Kumaran, UK
2/11/2010 10:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மீனகம்

தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை வழங்குவதில் சட்டச் சிக்கல்: சிறிலங்கா அறிவிப்பு

பதிந்தவர்_கனி on February 11, 2010
பிரிவு: செய்திகள்

தமிழின தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் வழங்குவதற்கு பல்வேறு சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அவரது மரணச் சான்றிதழை வழங்குவதற்கு பல நடைமுறைகளும், கால அவகாசமும் தேவைப்படும் என்று கூறியுள்ளது


Read more: http://meenakam.com/?p=6070#ixzz0fGfkNVtx

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக