சனி, 13 பிப்ரவரி, 2010

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபட்ச மகன் போட்டியிடுகிறார்



கொழும்பு, பிப். 12: வருகிற ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் (23) போட்டியிடுகிறார். இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஹம்பன்தோடா மாவட்டத்தில் உள்ள தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். இந்த நிலையில், ஹம்பன்தோடா நகரில் உள்ள டாங்கெல்லி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தனது பெற்றோர் முன்னிலையில் நமல் உரையாற்றினார். மக்கள் நலச் சேவைகளில் ஈடுபட்டுள்ள அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நமல், தனது தாய் மூலமாக அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டார். இதேபோல, தனது தந்தையின் வழிகாட்டுதலால் இந்த வயதிலேயே (23 வயது) தான் அரசியலில் நுழைந்துள்ளதாகவும் அவர் பெருமிதம் பொங்கக் கூறினார். முன்னதாக, தனது பேச்சைத் தொடங்குவதற்கு முன், தனது தந்தை அதிபர் ராஜபட்ச} தாய் ஷிராந்தி ஆகியோரின் கால்களைத் தொட்டு வணங்கினார் நேமல். தனது அரசியல் பயணம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், அதிகாரப்பூர்வ கடிதத்தை தனது தந்தையிடம் நமல் அளித்தார். அப்போது அவருடைய தாய் ஷிராந்தி இரு கரங்களையும் கூப்பி இறைவனை வழிபட்டார். இந்த நிகழ்ச்சியில் ராஜபட்ச பேசுகையில், வன்முறை, பழிவாங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் இருக்கக் கூடாது என்றார். கடந்த மாதம் 26 ஆம் தேதி நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தல் மூலம் இந்த இரு தீய போக்குகளுக்கும் முடிவு கட்டப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜபட்ச தோற்கடித்தார். கடந்த அதிபர் தேர்தலின் போது, அரசுப் பணியாளர்கள் முதல் கடைநிலையில் உள்ள கிராமவாசிகள் வரை அனைவரும் அச்சுறுத்தப்பட்டனர். எனினும், இந்த அச்சுறுத்தலை இந்தத் தேர்தல் முடிவு மூலம் துடைத்தெறிந்துவிட்டோம் என்றும் ராஜபட்ச குறிப்பிட்டார். மக்களுக்காக நேர்மையாகப் பணியாற்றுவதன் மூலமே அவர்களது ஆதரவையும், மரியாதையையும் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மட்டுமல்லாது, இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் ராஜபட்ச உறுதிபடத் தெரிவித்தார்.
கருத்துக்கள்
இளங்கழுகே! வழித் தோன்றல் வல்லூறே! நேரில் வந்தோ எங்கள் வழித் தோன்றல்களை அனுப்பியோ உன்னை வாழ்த்தத்தான் எங்கள் உள்ளம் துடிக்கின்றது. ஆனால்,உங்களின் எடுபிடியான இந்தியப் படை நாங்கள் எதிர்க்க வருவதாக எண்ணி எங்களை அழித்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தடுக்கின்றது. இருப்பினும் பரம்பரை அரசியலுக்குப்பாடம் கற்பிக்க எங்களால மட்டுமே முடியும என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். தமிழ் இறையாண்மை அழிவதை வேடிக்கை பார்க்கும் நாங்கள் என்றைக்குமே சிங்கள வல்லாண்மைக்கு எதிராகக் குரல் கொடுத்ததில்லை என்பதை மட்டும் நினைவில் கொண்டால் நாங்கள் உங்களின் தோழர்களே என்பதைப் புரிந்துகொள்வாய்! உம் தந்தை போல் எம்மையும் உம் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை உள்ளது. உன் கொற்றம் வாழ்க! உன் சுற்றம் வாழ்க! உன் பணபலம் படைபலம் எல்லாம் வாழ்க! இப்படிக்கு இந்திய அரசியல் தலைவர் (நாங்கள் பலராக இருப்பினும் நான் யார் என்பது உனக்குப் புரியாமலா போகும்?)
By Ilakkuvanar Thiruvalluvan
2/13/2010 3:40:00 AM

சிங்களர்களின பேரினப் படுகொலைகளுக்கு எதிராகவும் அரச வன்முறைக்கு எதிராகவும் பக்சே தன்னை நிலைநிறுத்த மேற்கொள்ளும் வன்முறைகளுக்கு எதிராகவும் யாரும் வன்முறையிலோ பழி வாங்கும் நடவடிக்கையிலோ ஈடுபட்டால் பக்சே அரசோ இந்திய அரசோ பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்பதை உணரத்த வன்முறை, பழிவாங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் இருக்கக் கூடாது எனப் பேசியுள்ளார்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/13/2010 3:29:00 AM

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அனுர பிரியதர்ச யாப்பா தனது வெற்றிக்கா ஊடகங்களை பயன்படுத்துவதை தடுப்பதும் அவரை அவரத தொகுதியில் தோற்கடித்து அரசியலில் இருந்து வெளியேற்றவதுமே கோட்டபாயின் நோக்கம் என்று தெரியவந்துள்ளது. ஜனாதிபதியின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகளினதும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கோட்டபாயவிடமே உள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனவே எதிர் வரும் காலங்களில் ஊடகத்துறை தொடர்பான முடிவுகளை கோட்டபாய ராஜபக்சவே நேரடியாக மேற்கொள்ளவார் என்றும் என்றும் இல்லாதவாறு ஊடக சுதந்திரம் இலங்கையில் மோசமடையும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை பசில் ராஜபக்ச இலஞ்சம் , ஊழல் மற்றும் மோசடிகள் மூலம் பணம் சேர்பதையும் சொத்துக்களை கொள்வனவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது ஊழல் நடவடிக்கைகளுக்காக அரச இயந்திரத்தையும் அமைச்சரவையினையும் பசில் ராஜபக்ச தவறான முறையில் பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் கோட்டபாய ராஜபக்ச பாது

By esan
2/13/2010 2:23:00 AM

நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் பசில் ராஜபக்சவிற்கே நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது. குறிப்பாக அரச இயந்திரங்களை பயன்படுத்தி அவர் பெற்றுவரும் கோடிக்கணக்கான வருமானம் நாமல் ராஜபக்சவினால் பங்காடப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தல் காலத்தில் நாமல் ராஜபக்சவை படுகொலை செய்வதற்கும் பசில் ராஜபக்ச தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேச நிகழ்வில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்ட போதிலும் அதிகாரம் மிக்க அவரின் இரு சகோதரர்களும் கலந்து கொள்ளாதமை பெரும் பூகம்பத்தின் அறிகுறியை உணர்தியுள்ளது. Print , Return del.icio.us digg stumbleupon buzzup BlinkList mixx myspace linkedin facebook reddit.com ma.gnolia.com newsvine.com furl.net google yahoo technorati.com new videos போரின் பின்னரான ஆனையிறவுப் பிரதேசத்தின் காணொளிக் காட்சிகள் போரின் பின்னரான கிளிநொச்சி நகர் (பகுதி 1) மேலும் » * எம்மவர் நிகழ்வுகள் » பிரான்சில் வீரத்தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு. » பிரான்சில் தமி

By esan
2/13/2010 2:16:00 AM

ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றியுள்ளதாகவும் பொய்யான தகவல்களை சர்வதேசத்திற்கு வழங்கியதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பேச்சாளர் கோட்டன் வையிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த 14 வருடங்களாக பணியாற்றிய வைஸ் தனது பதவியை கடந்த வருடம் இராஜினாமாச் செய்துள்ளார். அவுஸ்ரேலியாவில் தங்கியுள்ள வைஸ் அங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இலங்கையின் இறுதிக் கட்ட மோதல்கள் தொடர்பான அதிர்சிகரமான தகவல்களை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு அனைத்து விதமான போரியல் உத்திகளையும் பயன்படுத்தியதாகவும் சிறிய நடுத்தர மற்றும் பாரிய போராயுதங்கள் மூலம் குறுகிய நிலப்பரப்பிற்கும் சிக்கியிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல்களின் போது சுமார் 40,000 பொதுமக்கள் வரையில் உயிரிழந்தாகவும் இது குறித்து நம்பகமான தகவல்கள் தனக்கு கிடைத்தது என்றும் கோர்ட வைஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச யுத்த குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்ட

By esan
2/13/2010 2:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக