ஞாயிறு, 24 ஜனவரி, 2010




ஒண்டிவீரன் பகடைக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

First Published : 23 Jan 2010 03:37:00 AM IST


Last Updated : 23 Jan 2010 10:05:08 AM ISTகோவில்பட்டி,ஜன. ​ 22: ​ அருந்ததியர் சமூகத்தின் முதல் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஒண்டி வீரன் பகடைக்கு மணி மண்டபம் மற்றும் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக அரசு அமைக்க வேண்டும் என ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் (படம்) கேட்டுக்கொண்டுள்ளார்.​ ​​ கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:​ அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி.​ அதே போல மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு,​​ பொதுத் துறை நிறுவனங்களிலும் அருந்ததியர் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசு சிபாரிசு செய்யவேண்டும்.​ ​​ தமிழக அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்,​​ வன்கொடுமை புகார் தருபவர் மீதே வழக்குப் பதிவு செய்வதை நிறுத்த காவல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.​ அனைத்து சமுதாய சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கும் ​ மணி மண்டபம் மற்றும் உருவச் சிலை அமைத்துக் கொடுத்தது போல் அருந்ததியர் சமூகத்தின் முதல் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் நெற்கட்டான் செவல் பாளையத் தலைவர் மாவீரர் ஒண்டி வீரன் பகடைக்கும் மணி மண்டபம் மற்றும் முழு உருவ வெண்கலச் சிலை அமைத்து தர வேண்டும்.​ ​​ கேரள அரசு போல தமிழக அரசும் துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும்.​ ​ ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் தலித் மக்களுக்கென மத்திய அரசு ஒதுக்கும் சிறப்பு உட்கூறு திட்ட நிதியை,​​ இம் மக்களின் கல்வி,​​ வேலை வாய்ப்பு,​​ பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்க்கை மேம்பாட்டிற்கு முழுமையாக செலவிட வேண்டும் என்றார் அவர்.​ ​
கருத்துக்கள்

ஆதித்தமிழர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் பெரும்பாலும் தெலுங்கர்தாம் உள்ளனர். அவர்கள்தாம் பயன்பெறுகின்றனர். இதுபோல் பிற மாநிலங்களில் தமிழர பயன்பெறும் வாய்ப்பு உள்ளதா என யாரேனும் விவரம் தெரிவிக்க வேண்டுகின்றேன். நன்றியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/24/2010 4:19:00 AM

Uruppadum namma oooru! pongada ,........................!

By Jagan
1/23/2010 10:42:00 PM

எங்க ஊரு குண்டி வீரனுக்கும் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும். வாழ்க குண்டி வீரன்!

By குண்டிவீரன் பாசறை
1/23/2010 12:20:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக