திங்கள், 25 ஜனவரி, 2010

தமிழகத்தில் அகழாய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்: பேராசிரியர் க. அன்பழகன்



திருநெல்வேலி,ஜன. 24: தமிழகத்தில் பூம்புகார், கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் ஆய்வாளர்கள் தொடர்ந்து அகழாய்வுகளை நடத்தி தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை வெளிக்கொணர வேண்டும் என, தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் கேட்டுக் கொண்டார்.பாளையங்கோட்டை தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தில், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் சென்னை பெரியார் ஈ.வெ. ராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள்- ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத் திட்டங்களும்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.இதன் நிறைவு விழா தமிழக சட்டப்பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவில் நிதியமைச்சர் க. அன்பழகன் பேசியதாவது:சிந்துவெளி நாகரிகப் பெருநகரங்களான மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன. அதைவிட ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டவை மிகவும் தொன்மையானவை. அங்குதான் திராவிட நாகரிகம் பரவி இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஸ்பெயின் நாட்டினர் இந்தியாவில் மேற்கொண்ட அகழாய்வில்கூட இதை ஒப்புக் கொண்டுள்ளனர்.ஆதிச்சநல்லூரில் 3 அடுக்கு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இது 1500 ஆண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கு தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.இந்த எழுத்துகளும், ஹரப்பா, மொகஞ்சதாரோ இடங்களில் கிடைத்த எழுத்துகளும் ஒரே வடிவத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.2004-ல் தொல்லியல்துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வு ஆய்வு அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என இங்குக் கூறப்பட்டது. அந்த அறிக்கைகளை வெளியிட முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.கல்வெட்டு, சுவடி படிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை இங்கு கூறியவர்கள் தெரிவித்தனர். அதை அவர்கள் தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு தரலாம் என்றார் அமைச்சர்.முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருள் படக் கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் பேராசிரியர் ச. மோகன், மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

தமிழர்களுக்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்தது "போப் கால்டுவெல்லும்","லார்ட் முதலியார்களும்தான்" போதுமா!,போய் தூங்கு,உனக்கு என்பத்து எட்டு ஆண்டுகள் வயதாகிறது.தமிழுக்காக பாடுபட்டவனெல்லாம் போய் சேர்ந்துவிட்டான்கள்!,ஜாதிகாரனைத் தவிர வேறு யாருக்கும் எச்சில்கையால் காக்காய் ஓட்டாமல்,கலைஞர் சொன்னார் என்பதற்காக இரண்டு பெண்டாட்டி மட்டும் கட்டிக் கொண்டு ஜாலியாக இவ்வளவு நாள் மக்கள் பணத்தில் வாழ்ந்துவிட்டாய்!,பிழைத்து போ!.

By தமிழ்த்தாய்
1/25/2010 2:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக