செவ்வாய், 26 ஜனவரி, 2010

தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு? கருணாநிதி



சென்னை, ஜன.25: எல்லா தகுதிகளும் நிறைந்த மொழி தமிழ். எனவே தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.வடசென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னை பெரவள்ளூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.அக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:1938-ம் ஆண்டு முதல் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து 30}க்கும் மேற்பட்ட தமிழ்த் தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். இந்தி உள்பட எந்த மொழியையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால் நம் மீது கட்டாயமாக இந்தி திணிக்கப்படுவதைத்தான் மறுக்கிறோம். தமிழ் மொழிக்கான இடம் பறிக்கப்படுவதை எதிர்க்கிறோம்.1938-ல் இந்தியை கட்டாயப் பாடமாக்குவதில் அப்போதைய முதல்வர் ராஜாஜி தீவிரமாக இருந்தார். எனினும் காலம் மாறியது. அதே ராஜாஜி 1965-ல் இந்தியை எதிர்த்து என்னுடன் ஒரே மேடையில் நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார்.÷1963}ல் காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்தித் திணிப்பை எதிர்த்து அண்ணா அரசியல் சட்ட நகலை எரிக்க முயன்று, கைதானார். ஆனால் அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை யாரும் பறிக்கவில்லை. எனினும் 1986-ல் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்திய எம்.ஜி.ஆர். ஆட்சியில், இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல் சட்ட நகலை எரிக்க முயன்றதற்காக க. அன்பழகன் உள்ளிட்ட 10 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டது. இது மிகவும் வேதனையானது.மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கும் இந்த நாளில் குஜராத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்துள்ளது. இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்றும், அதை தேசிய மொழி என யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், மற்ற மாநில மொழிகளைப் போல இந்தியும் சில மாநிலங்களில் பேசக் கூடிய ஒரு மொழி மட்டுமே என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்நேரத்தில் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்துகிறது. தமிழை மட்டும் மத்திய ஆட்சி மொழியாக்க கோரவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்க மொழி, இந்தி ஆகிய மொழிகள் உள்பட தமிழையும் சேர்த்து அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீரிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்.தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? ஆட்சி மொழிக்கான எல்லா தகுதிகளும் தமிழுக்கு இருக்கின்றன. எனவே, இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதே மொழிப் போர் தியாகிகள் தினத்தில் எங்களது பிரதான கோரிக்கை ஆகும்.தமிழகத்தைப் பொருத்த வரை எங்களுக்கு ஆட்சி பெரிதல்ல. தமிழ் மொழியின் சிம்மாசனத்தைப் பறிக்க யார் முயன்றாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார் கருணாநிதி. கூட்டத்துக்கு வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ். பாபு எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துக்கள்

மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும் பன்னாட்டு அவைகளின் அலுவல் மொழியாகவும் தமிழ் விளங்கத் தமிழக அரசு முனைப்புடன் முயல வேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டில் தமிழ் உணமையான ஆட்சிமொழியாக விளங்கவும் கல்வி மொழி, சமய மொழி,என்பன போன்று தமிழ் நாட்டில் தமிழே தலைமையாக விளங்கவும் தமிழர்களுக்கு முதன்மை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சி பெரிதல்ல என்று பேசினால் நம்பகத் தன்மை போய்விடும். மயிலை மாங்கொல்லையில் இது போல் பேசிய பின்புதான் பதவி நாற்காலிகளில் பசையுடன் ஒட்டிக் கொண்டதால் ஈழத் தமிழர்களின் பேரவலப் படுகொலைகள் நடந்தேறியதை யாரும் மறக்க மாட்டார்கள்.எனவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டில் தமிழுக்கு உரிய தலைமையிடம் உடனடியாக அளித்து விட்டு மத்திய அரசிலும் தமிழுக்குச் சமஉரிமை பெற்றுத் தர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/26/2010 9:43:00 AM

I have not heard a sweeter language than Tamil' யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் - Bharathiyar/சுப்பிரமணிய பாரதி

By reader
1/26/2010 8:47:00 AM

...இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்றும், அதை தேசிய மொழி என யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...

By khan
1/26/2010 8:39:00 AM

yov perusu, poi pullaiya modalla english padikka sollu...

By Vanakkampatty Raamsamy
1/26/2010 8:06:00 AM

IT IS A FOOLISH DEMAND.....HINDI AND ENGLISH ARE SUFFICIENT...... KARUNANITHI MAHE A DRAMA IN THE NAME OF TAMIL

By avudaiappan
1/26/2010 8:04:00 AM

ஐயோ! தமிழ் ஆச்சி மொழியா சாரி ஆட்சி மொழி..... மகனுக்கு (அழகிரி) ஆங்கிலம் ஹிந்தி தெரியவில்லை அதனால் தமிழ் ஆட்சி மொழி.... என்ன ஒரு மொலி(ழி) பற்று..... சபாஷ் தமிழன் (கருணாநிதி) கில்லாடிபா

By thamilanban
1/26/2010 7:32:00 AM

...மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கும் இந்த நாளில் குஜராத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்துள்ளது. இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்றும், அதை தேசிய மொழி என யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், மற்ற மாநில மொழிகளைப் போல இந்தியும் சில மாநிலங்களில் பேசக் கூடிய ஒரு மொழி மட்டுமே என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்....Well said!!!

By Tamilan
1/26/2010 6:47:00 AM

அப்படியே தமிழன் வட இந்திய காரனுக்கு ஏன் அடிமையா இருக்கணும் என்று கேளுங்கள். நிறைய அமைச்சர் பதவிகள் தேடிவரும் அதை கொள்ளு பேரன்களுக்கு வாங்கி கொடுத்தா போச்சு

By Selva, Singapore
1/26/2010 6:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக