திங்கள், 25 ஜனவரி, 2010

LTTE
Vote this article
Up (130)
Down (2)


கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெரும் ஜனவரி 26ம் தேதியை துக்க தினமாக அனுசரிக்குமாறு இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை...

பாசமிகு தமிழீழ மக்களே இலங்கையின் தேசிய இனங்களுக்கு உண்டான ஜனாதிபதி தேர்தல் என இலங்கை தேர்தல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த தேர்தல்.

தேசிய இனங்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கி இடுக்கத்தின் உச்சியில் வைத்து நடாத்தப்படுகின்றது.

சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி வாழ்வாதாரங்களை அழித்து தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து அவர்கள் இரத்தத்தில் சிங்கக் கொடி ஏற்றி விட்டு நடாத்தப்படுகிறது.

இதற்குத்தான் ஜனநாயகம் என சிங்கள பேரினவாதம் பெயர் வைத்துள்ளது.

ஒடுக்குமுறைக்கும் இடம் பெயர்தலுக்கும் இரத்தக்களறிக்கும் சிங்கள பேரினவாதம் வைத்தருக்கும் பெயர்தான் ஜனநாயகம்.

இன உரிமைக்காய் போராடியவர்களை கொடும் சிறைக்குள் அடைத்துவைத்தும் சமாதானம் பேசியவர்களை கொன்று ஒழித்தும் ஈவிரக்கமற்ற அநீதிகள் புரிந்த பதவியின் பெயர்தான் இலங்கையின் ஜனாதிபதி.

இதற்குத்தான் இப்போது தேர்தல்.

தேர்தல் சமயங்களில் தம்மை நல்லவர் போல் காட்டி சமாதானம் பேசி அப்பாவிகளான தமிழ்மக்களை நம்பவைத்து மீண்டும் ஏமாற்றி அவர்களை ஒடுக்குவதுதான் இலங்கை ஜனாதிபதி தேர்தல்.

சிங்கள பேரினவாதம் தன்னை வளர்த்துக் கொள்ளுவதற்காகாவும் தமிழர் ஒடுக்குமுறைக்காக சில மாற்றங்களைச் செய்துகொள்ளுவதும்தான் இந்த தேர்தல்களின் வெளிப்பாடுகளும் முடிவுகளுமாக இருக்கும்.

ஆனால் இதில் போட்டியிடும் பேரினவாதிகளுக்குள் தமிழ் இன ஒடுக்குமுறைக் கொள்கையில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்காது.

இதுவரை காலமும் ஏற்படாத மனித பேரவலத்தை ஏற்படுத்தி தமிழர் இரத்தத்தில் கொடியேற்றிய இந்த ஜனாதிபதி தேர்தல் ஈழத் தமிழர்களின் துக்க தினமாகும்.

தமிழீழத்தில் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் இந்ந தேர்தல் நாளை இனப்படுகொலையின் துக்க தினமாக அனுஷ்டிக்கும்படி வேண்டுகிறோம்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் சர்வதேச நாடுகளுக்கு எமது அவலம் தெரியும்படி கறுப்புக் கொடிகள் ஏற்றி துக்கத்தை வெளிப்படுத்துமாறு வேண்டப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு சந்திரிகா ஆதரவு...

இந்த நிலையில், சரத் பொன்சேகாவை, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சந்தித்துப் பேசி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஹொரகொல்லையில் உள்ள, முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் இந்த சந்திப்பு இடம் பெற்றது.

யாருக்கு தனது ஆதரவு என்பதை இதுவரை சந்திரிகா தெரிவிக்கவில்லை. அதேசமயம் ராஜபக்சேவை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார். தன்னை சந்தித்துப் பேசி ஆதரவு கேட்க முயன்ற ராஜபக்சேவை நிராகரித்தார். இந்த நிலையில் பொன்சேகாவை அவர் சந்தித்துள்ளது, அவருக்கான தனது ஆதரவை மறைமுகமாக உணர்த்துவது போல உள்ளது இலங்கை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக