புதன், 27 ஜனவரி, 2010

சிங்கள இராணுவம் பெண் போராளிகளை சுட்டுக் கொல்லும் புதிய வீடியோ
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 06:30.37 AM GMT +05:30 ]

ஈழத் தமிழர் மீதான இறுதிப் போரின் போது சிங்கள அரசு நடத்திய காட்டுமிராண்டித்தனம் குறித்த புதிய ஒளிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது என ஹெட்லைன்ஸ் ருடே என்னும் வட இந்தியத் தொலைக்காட்சித் தெரிவித்துள்ளது.

பெயர் குறிப்பிடாதவர்களால் இந்த ஒளி்ப்பதிவு தமக்கு கிடைத்ததாகவும் அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அதில், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி சிங்கள இராணுவத்தினர் சித்திரவதை செய்வதை போன்ற காட்சிகள் உள்ளன என்றும் அத்தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

அத்தொலைக்காட்சி அவ்வொளிப்பதிவை காட்சிக்கு இதுவரை வைக்கவில்லை என்பதும், அந்த ஒளிப்பதிவை வெளியிடாமலேயே அந்த ஒளிப்பதிவு குறித்து சிங்கள இராணுவத்திடம் கேட்டது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எப்பொழுதும் போல் சிங்கள இராணுவம் இதனை மறுத்துள்ளது. இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடப்பதால் அந்த ஒளிப்பதிவு இந்திய அரசால் நெருக்கடி கொடுத்து வெளியிடப்படாமல் தடுத்த வைக்கப்பட்டிருக்கலாம் என பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் குடித்து விட்டு கலாட்டா செய்து அடிபடும் வட இந்திய மாணவர்களுக்காக காட்டுக் கத்தாக கத்துகின்ற, வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்த ஆவணம் கிடைத்தும் கூட அதனை வெளியிடாமல் மௌனம் சாதிப்பதை என்னவென்று சொல்வது?

பிந்திய செய்தி

குறித்த வீடியோ காட்சியை வெளியிடாமல் மௌனம் காத்த இவ் ஊடகம் தற்போது குறிந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது.

தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியை பார்க்க

வீடியோ இணைப்பு 1

வீடியோ இணைப்பு 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக