வெள்ளி, 29 ஜனவரி, 2010

சானியா மிர்சா திருமணம் ரத்துபுது தில்லி, ஜன. 28: பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் திருமணம் ரத்து செய்யப்பட்டது.÷சானியாவுக்கும் ஹைதராபாதைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகரின் மகனும், பால்ய நண்பருமான முகமது ஷோரப் மிர்சாவுக்கும் கடந்த ஆண்டு ஜூலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஷோரப் பிரிட்டனில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.÷இந்நிலையில் மாப்பிள்ளை முகமது ஷோரப் மிர்சா தனக்கு பொருத்தமானவர் அல்ல என்று கூறி இந்த திருமணத்தை ரத்து செய்வதாக சானியாவும் அவரது தந்தையும் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளனர்.÷"நானும் ஷோரபும் குழந்தைப் பருவம் முதல் நண்பர்களாக இருந்துவருகிறோம். இரு குடும்பத்தாருக்கும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமான உறவு இருந்துவருகிறது. ஷோரப் எனக்கு கிடைத்த மிக நல்ல நண்பர். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளோம். இருப்பினும் எங்கள் இருவரிடையிலான நட்பும், குடும்ப உறவும் தொடர்ந்து நீடிக்கும்' என்று சானியா தெரிவித்துள்ளார்.÷÷அண்மைக் காலமாக டென்னிஸில் சோபிக்கத் தவறிய சானியா, திருமணத்துக்குப் பிறகு டென்னிஸிலிருந்து ஓய்வுபெற போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் திருமண முறிவு அவருடைய விளையாட்டு ஆர்வத்துக்கு தடையை ஏற்படுத்துமா என்பது போகபோத்தான் தெரியும்.
கருத்துக்கள்

நல்ல முடிவு. ஏனெனில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கும் பொழுது புகழ்ச்சியில் மகிழ்ச்சியும் உயர்விற்கு ஊக்கமும் என்ற அளவில் மனப் போக்கு இருந்திருக்கும். திருமணப் பிணைப்பு என்றவுடன் தனக்குரியவள் என்ற எண்ணத்தில் மிர்சாவைப் பார்க்கையில் விளையாட்டு என்றில்லாமல் பலர்முன் தோன்றுதல் என்ற எண்ணத்தால் விளையாடத் தடை விதிக்கும் எண்ணம் வந்திருக்கும். இந்தச் சூழலில் மணமாகி அதன் பின்னர் விலக்கு பெறுவதை விட இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணத்தை நிறு்தியது சரிதான். இனிச் சில காலமேனும் சானியா மிர்சா விளையாட்டில் கண்ணும் கருத்துமாக இருக்கட்டும். விளையாட்டில் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/29/2010 2:46:00 AM

அக்காவுக்கு டிக்கியும், பேனட்டும் அநியாயத்துக்கு பெருத்துவிட்டது. இனி விளையாடுவது வேஸ்ட். சாதாரணமாகவே கிராண்ட் ஸ்லாம்களில் ஃகுவாட்டர் ஃபைனலையே டச் பண்னாது. இப்ப இந்த கனத்த உடம்பை வைத்துக்கொண்டுநானும் ப்ளேயர்னு போன ஜோரில் ஃபர்ஸ்ட் ரவுண்டுலேயே திரும்பி வந்துடும். அடுத்த ஆள ரெடி பண்ணுங்கப்பா!

By Tilakan
1/29/2010 1:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக