Last Updated :
தாரா புரம், ஜன. 27: கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆன்மிகத்திற்கென தனி அரங்கு அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் வலியுறுத்தினார். தாராபுரத்தில் இந்து முன்னணி மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில் மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் பேசியது: கரூரில் வரும் ஜூன் 20-ம் தேதி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சித்தர் பாடல்கள், தேவாரம், திருவாசகம் பாடுவதற்காகவும், அவை குறித்து விவாதிப்பதற்காகவும் தனி அரங்கு அமைக்கப்பட வேண்டும். சமச்சீர் கல்வி முறையால் பக்தி மார்க்கம் ஒடுக்கப்படும் அபாயம் உள்ளது. எனவேதான் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதை இந்து முன்னணி எதிர்க்கிறது. பசுவை தேசிய விலங்காக அறிவித்து, அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பசுவின் சாணம் மூலம் இயற்கை உரம் தயாரிக்கத் துவங்கிவிட்டால், யூரியா இறக்குமதியைத் தவிர்க்கலாம். ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்குவதுபோல், காசி, ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் மானியத் தொகைகளை வழங்க வேண்டும் என்றார் இராம.கோபாலன். மாநிலத் தலைவர் அரசுராஜா, துணைத் தலைவர் கு.பூசப்பன், பொறுப்பாளர்கள் முருகானந்தம், மூகாம்பிகை மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
By Ilakkuvanar Thiruvalluvan
1/29/2010 3:16:00 AM
By Vani
1/28/2010 10:05:00 PM
By Ragu
1/28/2010 7:35:00 PM
By Rahul
1/28/2010 3:50:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*