சனி, 30 ஜனவரி, 2010

பிரகாசமான, பெரிய சந்திரனை இன்று காணலாம்



புது தில்லி, ஜன.29: இந்த ஆண்டின் மிகப் பெரிய அளவிலான அதேசமயம் அதிக பிரகாசமான ஒளி வீசும் சந்திரனை பொதுமக்கள் சனிக்கிழமை கண்டு ரசிக்கலாம்.பௌர்ணமியைத் தொடர்ந்து சனிக்கிழமை தோன்றும் முழு நிலவு வழக்கத்தை விட 30 சதவீதம் கூடுதல் ஒளியுடன் பிரகாசிக்கும். அத்துடன் வழக்கமான தோற்றத்தைக் காட்டிலும் 15 சதவீதம் பெரிய அளவில் தோன்றும்.இந்த ஆண்டில் அதிக ஒளியுடன், பெரிய அளவிலான சந்திரன் சனிக்கிழமை தோன்றும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இரவு 8 மணி அளவில் முழு நிலவை மக்கள் கண்டு ரசிக்க முடியும். நிலவு பாதையின் ஒரு பகுதி பூமிக்கு 50 ஆயிரம் கி.மீ. நெருங்கி வருவதால் அளவில் பெரியதாகவும், அதிக பிரகாசத்துடனும் தோன்றும் என்று அறிவியலைப் பிரபலப்படுத்தும் சங்கத்தின் இயக்குநர் சி.பி. தேவகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக