மதுரை, ஜன. 29: மக்களவையில் எனது தமிழ் குரல் நிச்சயம் ஒலிக்கும்; அங்கு எனது செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.அழகிரியின் முயற்சியால் மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட 20 இடங்களில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நவீன கழிப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக 10 நவீன கழிப்பறைகள் தமிழக அமைச்சர்களால் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த அமைச்சர் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது:மக்களுக்குத் தொடர்ந்து பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறேன். தற்போது ஏழை- எளிய மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தில்லியில் இருப்பதைப்போல் மதுரை மாநகரில் 10 இடங்களில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள இந்த நேரத்தில் மக்களவையில் உங்களது தமிழ் குரல் ஒலிக்குமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:நிச்சயம் ஒலிக்கும். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்கள் தமிழில்தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மக்களவையில் எப்போதும் என்னுடைய செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.
கருத்துக்கள்
ஒருவர் குரல் அல்ல;ஒருவரின் முயற்சியால் அனைவரின் தமிழ்க் குரலும் ஒலிக்க வேண்டும். இந்திய மத்திய அரசு என்பது சம உரிமையுடன் மொழி வழித் தேசிய இனங்கள் இணைந்த கூட்டரசாகத் திகழ வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
1/30/2010 2:43:00 AM
1/30/2010 2:43:00 AM
இதுக்குத்தான் கைநாட்டு பயலுகளை பார்லிமெண்ட்டுக்கு அனுப்பக்கூடாது என்பது.
By Kalanithi
1/30/2010 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
1/30/2010 2:18:00 AM