வெள்ளி, 29 ஜனவரி, 2010

தமிழகத்தில் 2.5 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள்



சென்னை, ஜன.28: தமிழகத்தில் 2.5 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதாக மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் வி.கே. சுப்புராஜ் தெரிவித்தார். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அங்கிருந்த சுப்புராஜ் இது குறித்து கூறியது:÷தமிழகத்தில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸôல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2005}ல் 1.25 சதவீதமாக இருந்தது. தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக அது இப்போது 0.25 சதவீதமாக குறைந்துள்ளது.÷இந்தியா முழுவதும் 25 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். தமிழகத்தில் 2.5 லட்சம் அதாவது 10 சதவீத எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். 8 ஆயிரம் குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.÷எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பாதுகாக்க நாட்டிலேயே முதன்முறையாக ரூ. 5 கோடியில் நிதியம் ஒன்றை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. ÷அதன் மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் தொகையை ரூ. 25 கோடியாக அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் சுப்புராஜ்.
கருத்துக்கள்

இந் நோயாளிகள் எண்ணிக்கை 35 இலட்சம் எனப் பொதிகைத் தொலைக்காட்சியில தொடர்புடைய மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். எது சரி? அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/29/2010 3:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக