செவ்வாய், 26 ஜனவரி, 2010

இளையராஜா, ரஹ்மான் உள்பட 11 தமிழர்களுக்கு பத்ம விருது



சென்னை, ஜன.25: திரைப்பட இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட 11 தமிழர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன் விவரம்:பத்ம விபூஷண் விருது: மிருதங்கக் கலைஞர் உமையாள்புரம் சிவராமன் (கலை), டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி (தொழில், வணிகம்), வேதியலுக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (அறிவியல் மற்றும் பொறியியல்)பத்ம பூஷண் விருது: இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் (கலை).பத்ம ஸ்ரீ விருது: பத்மா சேஷாத்ரி பள்ளிகளின் தாளாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதி, பிரபல எழுத்தாளர் ரங்கநாதன் பார்த்தசாரதி என்கிற இந்திரா பார்த்தசாரதி (இலக்கியம் மற்றும் கல்வி), டாக்டர் ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி (மருத்துவம்), கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் (விளையாட்டு), டி.என். மனோகரன், வேணு ஸ்ரீனிவாசன் (தொழில் மற்றும் வணிகம்).
கருத்துக்கள்

ஏறக்குறைய 10 விழுக்காடு தாமரை விருதுகள் தமிழ் நாட்டினரக்கு வழங்கப்பட்டுள்ளது முன்னேற்றம்தான். தமிழர்கள் பெரும்பான்மையர் விருது பெறும் வகையில் தமிழக அரசு இனியாவது பரிந்துரைக்க வேண்டும். விருது பெற்றவர்களுக்குத் தினமணி இணைய நேயர்கள் சார்பாக வாழ்த்துகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/26/2010 9:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
நோபல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பத்மவிபூஷண் : பிரதாப்ரெட்டி, இளையராஜா உட்பட பலருக்கு கவுரவம்
ஜனவரி 26,2010,00:00 IS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக