வியாழன், 28 ஜனவரி, 2010

ராஜபட்சவுக்கு பிரதிபா, மன்மோகன் வாழ்த்து



புது தில்லி, ஜன. 27: இலங்கை அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபட்சவுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையில் இலங்கை அனைத்து துறைகளிலும் முன்னேறும் என்றும், நாட்டில் பூரண அமைதி நிலவும் என்றும் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளா.உங்கள் தலைமையில் இலங்கையில் பூரண அமைதி ஏற்பட்டு, அனைத்து சமூகத்தினரும் இணக்கத்துடனும், மரியாதையுடனும் வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக தொலைபேசியில் ராஜபட்சவிடம் மன்மோகன் குறிப்பிட்டார்.
கருத்துக்கள்

எங்களின் சார்பாக தமிழ் இனப்படுகொலைகள் புரிந்த இராசபக்சே! எங்கள் வழிமுறைகளைப் பின்பற்றித் தேர்தல் ஊழல்களாலும் அடக்குமுறைகளாலும் வெற்றி மாலையைச் சூட்டிக் கொண்டதற்கு வாழ்த்துகள்! முடிவு வேறு மாதிரியாக இருந்திருந்தால் எங்களின் தூண்டுதல்களும் தொடர்ச்சியான அழிப்பு வேலைக்கான உதவிகளும் அம்பலமாகியிருந்திருக்கும். நல்லவேளை பிழைத்தோம். இப்பொழுதும் பொன்சேகோ குறித்துக் கவலையாக இரு்தாலும் அவரைத் தேசத் துரோகக் குற்றத்தில் சிறையில் தள்ளி உண்மை வெளிவராமல் அமுக்கவாயாக! எப்பொழுதாவது தமிழர் பற்றிப் பேசிவிட்டு இலங்கையைச் சிங்களப் பூமியாக ஆக்குவாயாக! தமிழக மக்கள் கட்சிகளுக்குக் கொத்தடிமைகள். அவர்களின் கட்சித் தலைமைகளோ எங்களுக்கு முற்றும் அடிமைகள். எனவே, தமிழ்நாடு குறித்துக் கவலைப்பட வேண்டா. உம் அழிப்புத் தொண்டு தொடரட்டும். இந்திய ஊடகங்களுக்கும் தலைவர்களுக்கும் எலும்புத் துண்டுகளை வீச மட்டும் மற்கக வேண்டா. இப்படிக்கு ம.வும் சோ.வும் என வாழ்த்து மடல் அனுப்பியிருப்பார்களோ! சிங்களர்களே! மனித நேயத்துடன் வாழ்வீர்களாக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
1/28/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக