வெள்ளி, 29 ஜூலை, 2011

T.K.A.Nayar appointed as advisor to P.M.தலைமை யமைச்சரின் அறிவுரைஞராக டி.கே.ஏ.நாயர் நியமனம்

இந்தியாவின் இனப்படுகொலைகளைத் தொடரவும் வலிவும பொலிவும்  பெறாமல் போகவும உலக அரங்கில் மதிப்பிழந்து நலியவும் இதுதான் வழி என்று முடிவெடுத்த பின்பு யார் என்ன செய்ய  இயலும்?
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பிரதமரின் ஆலோசகராக டி.கே.ஏ.நாயர் நியமனம்

First Published : 29 Jul 2011 01:23:28 AM IST


புது தில்லி, ஜூலை 28: பிரதமரின் ஆலோசகராக டி.கே.ஏ. நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிக்கை வியாழக்கிழமை புது தில்லியில் வெளியிடப்பட்டது.டி.கே.ஏ. நாயர் இப்போது பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலராக உள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் இவர். அக்டோபர் 3-ம் தேதி பிரதமரின் ஆலோசகர் என்ற பொறுப்பை ஏற்றுக் கொள்வார். இப்பதவி மத்திய இணை அமைச்சர் பதவிக்கு நிகரானது. இதுவரை இவர் வகித்து வந்த முதன்மைச் செயலர் பதவிக்கு புலோக் சாட்டர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் இப்போது உலக வங்கியின் செயல் இயக்குநராக உள்ளார். அக்டோபர் மாதம் 3-ம் தேதி பிரதமரின் முதன்மைச் செயலர் பதவியை ஏற்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக