திங்கள், 25 ஜூலை, 2011

தமிழ்த் தேசியத்தை ஒற்றுமையுடன் உலகுக்குக் காட்டியுள்ள எமது மக்களுக்கு நன்றி! சரவணபவன் நா.உ..

தமிழ்த் தேசியத்தை ஒற்றுமையுடன் உலகுக்குக் காட்டியுள்ள எமது மக்களுக்கு நன்றி! சரவணபவன் எம்.பி.

நன்றி! நன்றி! எமது உயிரிலும் இனிய தமிழ்பேசும் எமது உறவுகளே!  இந்த வெற்றிக்கு வித்திட்டு தமிழ்த் தேசியத்தை ஒற்றுமையுடன் உலகுக்குக் காட்டியுள்ள எமது மக்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
எம்மைப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிகொள்ளும் வகையில் அமோக ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கினீர்கள். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல! முழுத் தமிழ் இனத்துக்கும் கிடைத்த வெற்றி!
ஐ.நா. நிபுணர் குழுவாலும் சர்வதேச நாடுகளாலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஜனாதிபதி, தமிழ் மக்கள் தங்கள் பின்னால் நிற்பதாகக் காட்ட இத்தேர்தலைப் பயன்படுத்த முனைந்தார்.
எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்ப்போம் வெளியார் தலையீடுகள் தேவையில்லை என ஜனாதிபதி வடக்கின் பிரசாரக் கூட்டங்களில பிரகடனம் செய்தார். அது வெளிநாடுகளின் தலையீட்டைத் தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை தமிழர்களின் வாக்குகளாலேயே காட்ட முயன்றதான ஏமாற்று வித்தை. ஆனால் தமிழ் மக்கள் ஏமாறவில்லை.
எமது தேசியம், எமது சுயநிர்ணயம் என்பவை தொடர்பாக தமிழ் மக்கள உறுதியுடன் நிற்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுகள்தான் இத்தேர்தல் முடிவுகள்.
தமிழ் மக்களின் குருதியில் அரசியல் நடத்தி அதிகாரம் செலுத்தும் டக்ளஸ் கூட்டுக்கு தமிழ் மக்கள் தாம் ஏமாறும் இனம் இல்லை என்பதை இத்தேர்தல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இந்த வெற்றிக்கு வித்திட்டு தமிழ்த்தேசியத்தை ஒற்றுமையுடன் உலகுக்குக் காட்டியுள்ள எமது மக்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
இதேவேளை இந்த வெற்றிக்கு நாம் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு எதிர்வு கூறும் நடவடிக்கையில் எம்முடன் இணைந்து பங்காற்றிய ஊடகங்கள், ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உங்களின் வெற்றி எம்மை அடக்கு பவர்களும் அவர்களுக்கு அடிவருடி வயிறு வளர்க்கும் கூட்டத்துக்கும் கிடைத்த தோல்வி!
எனவே இந்தத் தேர்தல் தமிழ் மக்களின் வெற்றி என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!
பல்லாயிரம் நன்றிகள்.
ஈ.சரவணபவன்
நாடாளுமன்ற உறுப்பினர், யாழ்.மாவட்டம்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
Short URL: http://meenakam.com/?p=30921

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக