பாராட்டுகள்! மக்கள் பயன்படுத்தட்டும்! பயன்பெறட்டும்! தாய்மொழியில் வாழ்த்துவதைப் புரிந்து வளமாக வாழட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தமிழில் திருமணச் சடங்கு நடத்த பயிற்சி
First Published : 30 Jul 2011 01:54:41 AM IST
புதுச்சேரி அருகே உள்ள பொம்மையபாளையம் மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வரவேற்பு நிகழ்ச்சியில், முதன் முதலாக மயிலம் மடத்துக்கு புறப்பட்ட 20-ம் பட்
புதுச்சேரி, ஜூலை 29: திருமணம் உள்ளிட்ட சடங்குகள் மக்களுக்குப் புரியும் வகையில் தமிழில் நடத்தும் வகையில் பயிற்சி அளிக்க உள்ளோம் என்று புதிதாகப் பொறுப்பேற்ற மயிலம் பொம்மபுர ஆதீன 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் கூறினார்.19-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் சித்தி பெற்றதைத் தொடர்ந்து 20-ம் பட்டம் சுவாமிகள் பொறுப்புக்கு வந்துள்ளார்.பொம்மையாபாளையம் திருமடத்தில் பூஜைகள் செய்து வந்த 20-ம் பட்டம் சுவாமிகள் முதன் முதலாக சமுதாயப் பணிகளில் ஈடுபட மடத்தை விட்டு வெளியே வெள்ளிக்கிழமை புறப்பட்டார். இதற்காக மயிலம் மற்றும் பொம்மையாபாளையம் மக்கள் சார்பில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் தலைமை தாங்கினார். விழாவில் 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பேசியது: கோயில் இருக்கும்போது திரு மடங்கள் எதற்கு என்று பலருக்கு சந்தேகம் இருக்கிறது. கோயில்களில் இறைவன் பிரதானம். மடங்களில் மடாதிபதிகள் இருக்கின்றனர். கோயில்களில் எப்படி பூஜைகள் செய்ய வேண்டும். எப்படி இறைவனை வணங்க வேண்டும். எதற்கு வணங்க வேண்டும் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான எல்லாற்றையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். திருமடங்களுக்கு சமயம், சமுதாயம் இரண்டும் இரண்டு கண்களாக விளங்க வேண்டும். எங்கள் திருமடத்தின் சார்பில் வருங்காலங்களில் தமிழர்களின் பண்பாட்டையும், இந்து கலாசாரத்தையும் பேணிக் காக்கும் வகையில் ஒழுக்க நெறிகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளி ஒன்றை தொடங்க உள்ளோம். மேலும் திருமணம் உள்ளிட்ட சடங்குகள் மக்களுக்குப் புரியும் வகையில் தமிழில் நடத்தும் வகையில் பயிற்சி அளிக்க உள்ளோம். இந்த திருமடத்தில் உள்ள தியான பீடத்தில் திருப்பணி நடத்த உள்ளோம் என்றார் சிவஞான பாலய சுவாமிகள். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் விழாவில் பேசினார்.பேரூர் ஆதினத்தின் இளைய மடாதிபதி மருதாசல அடிகளார், கோயமுத்தூர் கெüமார மடம் குமரகுருபரசுவாமிகள், சிதம்பரம் மெüன சுவாமிகள், தென்சேரிமலை முத்து சிவராம சுவாமிகள், தாராபுரம் மெüன சிவாச்சல அடிகளார், வடலூர் ஊரன் அடிகளார், பழனி சாது சண்முக சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் ஆதீன புலவர் ஆ. சிவலிங்கனார், சென்னை பல்கலைக் கழக சைவசித்தாந்தத்துறையின் தலைவர் பேராசிரியர் வை. ரத்தினசபாபதி, புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் வி. வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக