புதன், 27 ஜூலை, 2011

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பவள விழா

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பவள விழா

First Published : 27 Jul 2011 01:48:13 AM IST


கோவை, ஜூலை 26: கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பவளவிழா கோவையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்கிறார்.சிற்பியின் பவள விழா, கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் 30-ம் தேதி, சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் அருளாளர் மங்கள வாழ்த்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து நடக்கும் கவியரங்க நிகழ்ச்சிக்கு கவிஞர் புவியரசு தலைமை வகிக்கிறார். அடுத்து கோவை ஞானி தலைமையில் இலக்கிய அமைப்புகளின் வாழ்த்தரங்கம் நடக்கிறது. மாலை 6.30 மணியளவில் சிந்தனைத் திருவிழா நிகழ்ச்சி நடக்கிறது.2-வது நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (31ம் தேதி) காலை சிற்பியின் படைப்புகள்- ஆய்வு நிகழ்ச்சி நடக்கிறது. பிரபஞ்சன், கவிஞர் மு.மேத்தா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.பகல் 11.30 மணியளவில் பழ.நெடுமாறன் தலைமையில் மொழி என்னும் அரண் என்ற தலைப்பில் நிகழ்வு நடக்கிறது.மாலை 3.30 மணிக்கு "சிற்பி இலக்கிய விருது' வழங்கப்படுகிறது. விழாவுக்கு "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் தலைமை வகிக்கிறார். சிற்பி வரவேற்கிறார். மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் விருது, பரிசுகளை வழங்குகிறார். ÷ மாலை 4.30 மணியளவில் "சிற்பி கவிதைகள்' தொகுப்பு நூல்களை ஆர்.நல்லகண்ணு வெளியிடுகிறார். சிற்பியின் "புதிர் எதிர் காலம்' நூலை கவிஞர் வைரமுத்து வெளியிடுகிறார்.நிறைவு விழா: இரவு 7 மணிக்கு நடைபெறும் நிறைவுவிழாவுக்கு சக்தி குழுமத் தலைவர் நா.மகாலிங்கம் தலைமை வகிக்கிறார். சிற்பியை கெüரவித்து நிறைவுரையாற்றுகிறார், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக