ஞாயிறு, 24 ஜூலை, 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை: இராமதாசு வலியுறுத்தல்

இலங்கை மீது பொருளாதாரத் தடை: ராமதாஸ் வலியுறுத்தல்

First Published : 23 Jul 2011 05:39:41 PM IST

Last Updated : 23 Jul 2011 09:33:21 PM IST

சென்னை, ஜூலை 23: இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அந்த நாட்டிற்கான உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி இலங்கைக்கு வழங்கப்பட இருந்த ரூ.65 கோடி நிதி உதவியையும் அமெரிக்க அரசு ரத்து செய்திருக்கிறது.இலங்கை போரில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறை மனநிம்மதி அளிக்கிறது.அதே நேரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு கவலையும் வேதனையும் அளிக்கிறது.இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.இதன் மூலம் 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதில் அமெரிக்காவைவிட இந்தியாவிற்குதான் அதிக பொறுப்பு உள்ளது.எனவே, இனியும் காத்திருக்காமல் ராஜபட்சவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விசாரணை முடியும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.அதேநேரத்தில் இந்தத் தடையால் தமிழர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய நிதியைக் கொண்டு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தரும் திட்டத்தை இலங்கையிலுள்ள்  இந்தியத் தூதரகத்தின் மூலமாக மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
கருத்துகள்

ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இருக்கும் அக்கறை கூட நமது இந்திய அரசுக்கு தமிழர்கள் மேல் இல்லாதது வேதனை தரும் விஷயம்.
By கோவம்கொண்டான்
7/23/2011 9:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக