என்றைக்கும் பார்க்கச் சலிக்காத காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமாகித் திரைஉலகின் வெற்றி நாயகராக வலம் வந்த இரவிச்சந்திரன் அவர்களின் மறைவிற்கு அவர்தம் குடும்பத்தாருக்கும் நேயர்களுக்கும் தினமணி நேயர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்
First Published : 25 Jul 2011 09:32:29 PM IST

சென்னை, ஜூலை 25: கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் ரவிச்சந்திரன் இன்று இரவு மருத்துவமனையில் காலமானார்.பழம்பெரும் நடிகரான அவர், டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த "காதலிக்க நேரமில்லை" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுக படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதிலும் அந்தபடத்தில் வந்த "விஸ்வநாதன் வேலை வேண்டும்..." , "உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா..." உள்ளிட்ட பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.இவர் நடித்த "அதே கண்கள்", "இதயகமலம்", "கெளரி கல்யாணம்", "குமரிப்பெண்", "உத்தரவின்றி உள்ளே வா" உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை. தனக்கென தனி பாணியைப் பின்பற்றிய ரவிச்சந்திரனின் ஸடைல், அப்போதைய கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளை வெகுவாய்க் கவர்ந்தது.பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய ரவிச்சந்திரனுக்கு விஜயகாந்தின் "ஊமை விழிகள்" படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதில் வில்லனாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அப்பா, தாத்தா போன்ற குணச்சித்திர கேரக்டரில் நடித்தார்.சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்த ரவிச்சந்திரனுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிசிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்


By சங்கரன்.புதுவை
7/25/2011 11:15:00 PM
7/25/2011 11:15:00 PM


By John Shiva
7/25/2011 10:36:00 PM
7/25/2011 10:36:00 PM


By ரவீந்திரன்
7/25/2011 10:35:00 PM
7/25/2011 10:35:00 PM


By ரவீந்திரன்
7/25/2011 10:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/25/2011 10:34:00 PM
இந்த இரங்கல் செய்தியை வெளியிடாததன் காரணம் என்ன?தினமணிதான் அறியும். ஒருவேளை அனுதாபம் எனக் குறிப்பிட்டிருந்தால் வெளியிட்டிருக்குமோ?
பதிலளிநீக்குமறு பதிவை வெளியிட்டுள்ளது தினமணி. நன்றி.
பதிலளிநீக்கு