வியாழன், 28 ஜூலை, 2011

திரைப்படத்திற்கு வந்தது ஆக்சிடெண்ட் எனப் பலர் கூறுவார்கள். ஒன்று அப்படியே எழுதப்படும். அல்லது விபத்து எனக் குறிக்கப் பெறும். இந்தச் செய்தியில்தான் < தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு > எனச் சரியாகக் குறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அவர் சொல்லியிருந்தால் சம்முவிற்குப் பாராட்டு. பெரும்பாலும் செய்தியாளர் எழுதியிருக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறெனில் எழுதிய செய்தியாளருக்கும் வெளியிட்ட தினமணிக்கும் பாராட்டுகள். சினிமாவையும் திரைப்படம் என்றே குறிப்பிட்டு இருக்கலாம் அல்லவா? ரிலீசு, சோடி முதலான அயற் சொற்களையும்  தவிர்த்து இருக்கலாம் அல்லவா?அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


விடைபெறுகிறார் ஷம்மு

First Published : 27 Jul 2011 12:00:00 AM IST


தசாவதாரம்', "காஞ்சிவரம்', "மலையன்', "மாத்தி யோசி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷம்மு. அவர் நடித்துள்ள "மயிலு', "பாலை' படங்கள் ரிலீசுக்கு தயாராகிறது. இந் நிலையில் சினிமாவில் நடிப்பதை இத்துடன் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து ஷம்முவிடம் கேட்டால், ""தமிழகம் பூர்விகம் என்றாலும், அமெரிக்காவில்தான் படித்து வளர்ந்தேன். டாக்டர் படிப்பை பாதியிலேயே நிறுத்தி சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து விட்டேன். அங்கு புளோரிடா மகாணத்தில் உள்ள "யுனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் புளோரிடா' பல்கலைக்கழகத்தில் மீண்டும் என் படிப்பைத் தொடரப் போகிறேன். அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்த நான், சினிமாவுக்கு வந்ததது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு. நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தன. தேசிய விருது பெற்ற "காஞ்சிவரம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தது பெருமைக்குரியது. கமல்ஹாசனின் ஜோடியாக நடிக்காமல் போனதுதான் என் சினிமா வருத்தங்களில் முக்கியமானது. ஒன்றிரண்டு படங்களில் நடித்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு மேல் வாய்ப்புகள் வந்ததில் மகிழ்ச்சி. மீண்டும் சினிமாவுக்கு வருவேனா? என்பதைக் காலம்தான் முடிவு செய்யும் என்றார் ஷம்மு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக