தமிழ் அமைப்பினர் உண்ணாவிரதம்
First Published : 26 Jul 2011 12:30:57 AM IST
புதுதில்லியில் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு புறப்படுவதற்கு முன்பு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிடும் தமிழ் அமைப்பினர்.
காஞ்சிபுரம், ஜூலை 25: புதுதில்லியில் நாடாளுமன்றத்தின் முன் உலக தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜூலை 28-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ் அமைப்பினர் திங்கள்கிழமை புதுதில்லி புறப்பட்டு சென்றனர். ÷புதுதில்லி நாடாளுமன்றத்தின் முன் உலக தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜூலை 28-ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறுகிறது. ÷இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இந்த கூட்டமைப்பின் தலைவர் வா.மு.சேதுராமன் தலைமை தாங்குகிறார். இந்த உண்ணாவிரதத்தில் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக இந்தியா அறிவிக்க வேண்டும். ÷இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபட்ச உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ÷இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழர்கள் வந்து பங்கேற்கின்றனர். ÷இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரம் பகுதியில் இருந்து 15 பேர் புதுதில்லி புறப்பட்டு சென்றனர். ÷இவர்கள் புதுதில்லி புறப்படும் முன் இவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ÷பின்னர் ராஜபட்சவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற தமிழ் அமைப்புகளின் குழுவினருக்கு டாக்டர் விமுணாமூர்த்தி தலைமை தாங்கினார். ÷தமிழ் ஆர்வலர்கள் மா.செ.தமிழ்மணி, காஞ்சிஅமுதன், குறள்அமிழ்தன், கோதண்டன் உள்பட 15 பேர் புறப்பட்டனர். ÷இதுபோல் செங்கல்பட்டு, மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் புதுதில்லி புறப்பட்டு சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக