செவ்வாய், 26 ஜூலை, 2011

manmohansingh and pa.chidambaram should be resigned - Nidhin: மன்மோகன், ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்: நிதின் கட்கரி

மன்மோகன், ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்: நிதின் கட்கரி

First Published : 26 Jul 2011 03:03:17 AM IST


 புதுதில்லி, ஜூலை 26: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் அவர்கள் உடனடியாக தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்கரி வலியுறுத்தி உள்ளார்.  தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் வாதிட்டபோது, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோரிடம் ஆலோசித்தே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.  இது குறித்து தில்லியில் பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் தலைவர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறியது:  2ஜி உரிமம் வழங்குவதில் நடைபெற்ற குளறுபடிகள் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவுடன் நடைபெற்று இருப்பது தெள்ளத் தெளிவாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் ஒரு நிமிடம் கூட தாமதம் செய்யாமல் பதவி விலக வேண்டும்.  இவர்கள் இருவரும் சட்ட ரீதியாகவும், தார்மிக அடிப்படையிலும் தொடர்ந்து பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார்கள்.  ஆ.ராசா தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன் வைக்கப்படுவதாகக் கூறினாலும், அவரது சார்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ள விவரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, அனைவராலும் கவனத்தில் கொள்ளக் கூடியது.  தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2003-ல் தான் முதல் முறையாக நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்று, தொலைத் தொடர்பு துறை அலைகற்றை உரிமம் வழங்குவதற்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.  அதன் அடிப்படையில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அலைக்கற்றை உரிமம் வழங்க ஒப்புதல் அளித்திருப்பதை பிரதமர் மன்மோகன் சிங் உறுதிப்படுத்தியிருக்கிறார். உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளன. இதை ஒழுங்குபடுத்த மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் தவறி விட்டனர். இதன் மூலம் மலிவான விலைக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்கு ப.சிதம்பரம் மறைமுகமாக உதவி இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக